கல்முனை வடக்கு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்  ஞாயிற்றுக்கிழமை(30)    காலை 6.00 மணிமுதல் பக்தர்களின் பங்குபற்றலுடன்   சிறப்பாக இடம்பெற்றது .

அத்துடன்  நாளை (31) மகா கும்பாபிசேகம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த சனிக்கிழமை (29) கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்து ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேக கிரியைகள்   அதிகாலை ஆரம்பமாகியது.

மேலும்    திங்கட் கிழமை (31) குடமுழுக்கு இடம்பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 12.09.2020 அன்று சங்காபிஷேகம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

    மேற்குறித்த பூஜை இடம்பெறும்  கோவில் சட்டவிரோதமாக பிரதேச செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.