கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான பரீட்சைக்கள் மீண்டும் ஆரம்பம்.

கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைகள் எதிர்வரும் 30.10.2020 , 31 .10.2020 , 01.11.2020 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்க செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது  30.10.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 – 4.00 மணி வரை  சாத்திரம் , 31.10.2020 சனிக்கிழமை மு.ப 9 .00 – 12.00 மணி வரை  இலக்கியம் , பிற்பகல் 1.00 – 4.00 மணி வரை  வரலாறு , 01.11.2020 ஞாயிற்றுக்கிழமை  முற்பகல் 9.00 – 12.00 மணி வரை  இலக்கணம் , பி.ப 1.00 -4.00 மணி வரை  உரைநடை ஆகிய பாடங்கள் இடம்பெறவுள்ளது. மேலும் பரீட்சைகள் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மாகாவித்தியாலயம் மட்டக்களப்பு ஆணைப்பந்தி இந்து மகளீர் கல்லுரி ஆகிய பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.