பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனையில் இன்று விசேட துஆப் பிராத்தனை…

நூருள் ஹுதா உமர்.
புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டலுக்கமைய கொரோனா   தொற்றிலிருந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு  வேண்டி நாடுமுழுவதும்  மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றது. அதில்  ஒரு அங்கமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை பிராந்திய இணைப்பாளர் எம்.சி. அஹமட் புர்க்கான் அவர்களின் தலைமையில்   இன்று (13) மாலை 4.00 மணியளவில்   கல்முனைக்குடி காசிம் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாயலில் கொரோனா  தொற்றிலிருந்து பாதுகாப்பு வேண்டி  விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
விசேட  துஆ பிரார்த்தனையை மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் நாசர் அவர்களின் வழிகாட்டலில்  மெளலவி ஏ.எம் அஸ்பான் (அல்ஹௌஷி) நிகழ்த்தினார்.

இன் நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மஸ்ஜிதுல் நூராணியா பள்ளிவாயலின் நிர்வாகத்தினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை மத்திய குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பேணி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.<

/div>

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.