லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் விடுதலை!

சில் துணி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர்வழக்கில் இருந்து இன்று (19)
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த இருவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பிலேயே, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வேளையில், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்குச் (TRC) சொந்தமான ரூபா 600 மில்லியன்  அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தி மோசடி செய்ததாக, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.