பிள்ளைகள் இணைய வழி கல்வி நடவடிக்கை -முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை பற்றி கவனத்தில் கொள்வது அவசியம்

பிள்ளைகள் இணைய வழியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை பற்றி கவனத்தில் கொள்வது அவசியம் என கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணரான மானெல் பஸ்க்குவெல தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான வகுப்புகளைச் சேர்ந்த பிள்ளைகள் ஓய்வின்றி நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருப்பது உசிதமானதல்ல. இதன் மூலம் பிள்ளைகளின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் பற்றி ஆசிரியர்கள் மாத்திரமன்றி பெற்றோரும் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.