குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் வாகரை வீதிகள் புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!

(ந.குகதர்சன்)

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாமைச்சேனை பிரதேச விவசாயிகள் தங்களுக்கு போக்குவரத்து பாதை சீரின்மை காரணமாக நாங்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாமைச்சேனை வயல் பிரதேசம் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி நாவலடி சுற்று வட்டத்தில் இருந்து எட்டு கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் போது வலது பக்கம் நான்கு கிலோ மீற்றர் பயணத்தில் அமைந்துள்ள விவசாய பிரதேசம் தான் வெள்ளமைச்சேனை பிரதேசம்.

பிரதான வீதியில் இருந்து பயணிக்கும் நான்கு கிலோ மீற்றர் தூரமும் எந்தவித வசதிகளும் இல்லாமல் குன்றும் குழியுமாக காட்சியளிப்பதுடன் பயணம் செய்வதற்கு மிகவும் சிரமமான பாதையாகவும் காணப்படுகின்றது.

வெள்ளாமைச்சேனை விவசாய பாதைக்கு செல்வதற்கான பாதையை புனரமைத்து தருமாறு இப்பகுதி விவசாய அமைப்புக்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரச திணைக்களக்களின் அதிகாரிகளிடம் பல தடவை கோரிக்கை விடுத்தும் எங்கள் பகுதிக்கான வீதி அமைக்கப்படவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

470 விவசாயிகளின் 1410 ஏக்கர் வயல் நிலங்களும் இரு நூறு ஏக்கர் மேட்டுநில பயிர்ச் செய்கைக்குரிய காணிகளையும் கொண்ட வெள்ளாமைச்சேனை விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாகவுள்ள அவர்களுக்கான போக்குவரத்து பாதையை அமைத்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையாக அப்பகுதி விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் அரச திணைக்களக்களின் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா என்ற சந்தேகத்தில் விவசாயிகள் தினமும் விவசாய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.