வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பை சேர்ந்த குறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டிருந்தது.
அப் பரிசோதனைக்கான முடிவுகள் இன்று (08]) கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த கைதிக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த கைதியை கொரோனா வைத்தியசாலைக்கு அனுபுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார துறையினர், குறித்த கைதியுடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை