சிவராத்திரி தின வழிபாடு – பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி

(வி.சுகிர்தகுமார்)

நாளை அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி தின வழிபாடுகளுக்கு அமைவாக ஆலயங்கள் யாவிலும் துப்பரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக சிவராத்திரி பூஜை வழிபாடுகளுக்கு மிகவும் சிறப்பாக நடைபெறும் சிவன் ஆலயங்களிலும் இப்பணிகள் இடம்பெற்றன.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் ஆலயத்திலும் பனங்காடு சமுர்த்தி சமுதாய கட்டமைப்பின் உறுப்பினர்களால் பாரிய சிரமானப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டன.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ராஜசிறி மற்றும் கிராம உத்தியோகத்தர் எஸ்.லோகநாதன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணியில் சமுர்த்தி சமுதாய அடிப்படைய அமைப்புக்களின் பெருமளவான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆலய வளாகத்தில் உள்ள குப்பை கூழங்கள் அகற்றப்பட்டதுடன் வடிகான்களும் துப்பரவு செய்யப்பட்டன. அகற்றப்பட்ட குப்பை கூழங்கள் பற்ற வைக்கப்பட்டதுன் பெரும் குப்பைகள் உழவு இயந்திரங்களின் உதவியோடு அகற்றப்பட்டன.

அத்தோடு ஆலய பூஜை வழிபாட்டிற்குரிய பொருட்களும் பெண்களால் சுத்தம் செய்யப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.