வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வைகாவிசாகப் பொங்கலை அறிவிக்கும், பாக்குத்தெண்டல் மரபுவழியில் இடம்பெற்றது.

[விஜயரத்தினம் சரவணன்]

முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் வருகின்றது என்பதைஅறிவிக்கின்ற, முதல் சடங்கான
பாக்குத்தெண்டல் நிகழ்வு 10.05.2021 இன்று அதிகாலை இடம்பெற்றது.

அந்தவகையில் அதிகாலை 02.00 மணியவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் சந்நிதானத்தில் விசேட பூசைவழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து வைகாசிாவிசாகப் பொங்கல் வருகின்றது என்பதை  பாரம்பரிய முறைப்படி அறிவிக்கும் பொருட்டு காட்டாவிநாயகர்ஆலயத்திலிருந்து, அதற்கென நியமிக்கப்பட்டுள்ளவர்கள் கால்நடையாக புறப்பட்டனர்.

அவ்வாறு புறப்பட்டவர்கள் ஊர் ஊராக சென்று சேகரித்த, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், நாணயக்குற்றிகள் முதலான  மங்கலப்பொருட்கள் கட்டாவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் சந்நிதானத்திற்கு கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து, குறித்த மங்கலப்பொருட்கள் மஞ்சள் துணி ஒன்றில் சுற்றப்பட்டு, அம்மன் சந்நிதானத்திற்கு அருகே நாட்டப்பட்டிருக்கின்ற வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள குறித்த மங்கலப் பொருட்கள், வைகசி விசாகப் பொங்கல் அன்று அதிகாலை தீர்த்தம், மடப்பண்டம் உள்ளிட்ட பூசைப் பொருட்களுடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மரபு வழியில் இவ்வருடத்திற்கான வருடாந்த வைகாசிவிசாகப் பொங்கல் ஆரம்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.