கோவிட்-19 தொற்றாளர்கள் துண்பங்களுக்கு உள்ளாக்கப்படுவது கவலையானது…

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளங் காணப்படுகின்றவர்கள் பல்வேறு வடிவங்களில் துண்பப் படுவதோடு அநீதிகளுக்கும் உள்ளாக்கப் படுவது கவலையளிப்பதாக கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.  மஹ்தி தெரிவித்தார்.

கிண்ணியாவில் இன்று(20) அவரது அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே   அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துரைக்கையில்

கோவிட-19 தொற்றுக்கு உள்ளளானவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களில் சிலர் இடை நிலை சிகிச்சை நிலையங்களிலும் சிலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்கள் அனுமதிக்கப் படுகின்ற கோமரங்கடவெல, புணானை போன்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் காற்றோட்டமின்மை, வியர்வை, தாயுடன் தங்குகின்ற குழந்தைகள் கட்டிலில் இருந்து கீழே விழக்கூடிய அபாயம், மலசல கூட வசதிகள் போதாமை போன்ற பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்ப தாகவும் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறுகின்ற நோயாளிகளில் தாமாக உணவையோ, தேணீரையோ உட்கொள்ள முடியாதவர்கள் துணைகளில்லாமல் உணவின்றி ஆரோக்கியமிழந்து அநியாயமாக உயிரிழக்கின்ற நிலைமையையும், அவர்களை வெறுப்போடும், குற்ற உணர்ச்சியோடும் பார்ப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

அவ்வாறு அனுமதிக்கப் படுபவர்களை சிரமங்கள் இன்றி முறையாக கவனிக்க முடியாதவிடத்து அவர்களை கொண்டு செல்லாது அவர்களது வீட்டிலேயே உறவினர்களால் சுகாதார ஆலோசனைகளோடு தனிமைப்படுத்தி பராமரிப்பதற்காவது அனுமதிக்கப்பட வேண்டும்.

அச்சத்துடனும், பீதியுடனும் இருக்கின்ற கொறோனா தொற்றாளர்கள் இவ்வாறான துண்பங்களுக்கும், அநீதிகளுக்கும் முகங்கொடுப்பது என்பது மிகவும் வேதனையானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும்.

எனவே இவ்வாறான துண்பியல் சம்பவங்களுக்கு இந்த தொற்றாளர்கள் இனிமேலும் முகங்கொடுக்காத வகையில் அவர்களை பராமரிக்கப் படுவதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.