இலங்கையில் 14 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கல்…

நாட்டில் நேற்று (19) மாத்திரம் 16,845 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசியின் முதலாவது மருந்து போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 474,685 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 7,275 பேருக்கு கொவிசீல்ட் (Covishield) தடுப்பூசியின் இரண்டாவது மருந்து போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 304,961 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்து போடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் 17 பேருக்கு Suptnik V தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14,934 பேருக்கு Suptnik V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை 1,414,861 பேருக்கு முதலாவது மருந்து தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.