கொவிட் தடுப்பூசிகள் , கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வில் தகவல்!

உலக நாடுகளில் தற்போது பயன்பாட்டிலுள்ள அனைத்து வகை கொவிட் தடுப்பூசிகளும், கொவிட் மரணம் ஏற்படுவதிலிருந்து உயர்ந்தளவு பாதுகாப்பை அளிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் பயன்பாட்டில் உள்ள 8 கொவிட் தடுப்பூசிகளின் சாத்தியக்கூறு இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அனைத்து வகையான கொவிட் திரிபுகளுக்கு எதிராகவும், பைஸர் பயோஎன்டெக்  தடுப்பூசியே உச்ச அளவில் வினைத்திறனாக செயற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கமைய, பைஸர், மொடர்னா, ஜோன்சன் என்ட் ஜோன்சன், அஸ்செனெகா, ஸ்புட்னிக், நொவாவெக்ஸ், சினொவெக் மற்றும் சினோபாம் ஆகிய தடுப்பூசிகள் கொவிட் மரணம் ஏற்படுவதில் இருந்து உச்சளவு பாதுகாப்பு அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்