வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம் ஆரம்பம் !

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் உகந்தைமலை ஸ்ரீ முருகன் ஆலய கொடியேற்றம்இன்று   இன்று {10]நடைபெற்றது.

ஆலய கொடியேற்றமானது கொவிட் 19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு. சீதாராம குருக்கள் தலைமையிலான குருமார்களினால் இவ் கொடியேற்ற திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்று இருந்தன.

ஆலயத்தில் விசேட யாகங்கள் மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெற்று நண்பகல் வேளையில் கொடித் தம்பத்தில் கொடியேற்றப்படதைத் தொடர்ந்து முருகப் பெருமானுக்கான தீபாராதணைகளும் இடம்பெற்று இருந்தன.

ஆலய கொடியேற்ற திருவிழாவானது கடந்த 25ந் திகதி அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தலைமையில் ஆலய வளாகத்தின் இடம்பெற்ற கூட்டத்தின் பிரகாரம் ஆலய உற்சவத்தில் 30பேர்கள் மாத்திரம் பங்குபற்ற முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தன.

அதற்கு அமைவாக லாகுகல பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களால் ஆலய முன்றலில் ஆலய நிருவாகம் உற்பட அனைவரும் அன்ரீஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகளை குருமார்கள் முன்னெடுத்து இருந்தனர்.

இந்நிலையில் உகந்தை மலை ஸ்ரீமுருகன் ஆலயத்தின் கொடியேற்றமானது இன்று வேதாகம மந்திர மேள வாத்தியங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டு இருந்ததுடன் விசேட பூஜைகள் இடம்பெற்று இருந்தன

ஆலய கொடியேற்றத்தினைத் தொடர்ந்து ஆலயத்தில் 15 நாட்கள் பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெற்று உகந்தைமலை முருகப் பெருமானின் கிருபையால் எதிர்வரும் 25ந் திகதி தீர்த்தோற்சவத்துடன் இவ் ஆண்டுக்கான வருடார்ந்த உற்சவம் நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உகந்தை மலை ஆலயமானது இலங்கையின் முதல் மன்னனான குபேரன் காலத்தில் ஆதியில் வேடர்களால் வேல் வழிபாடு இடம்பெற்றிருந்தன. பின்னர் இராவணனின் காலத்தில் சிவாலயமாகவே இருந்துள்ளதாகவும் அந்த சிவாலயம் தினசிங்கன் என்பவனால் அழிக்கப்பட்டதக வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புவிக்கின்றனர்.

இலங்கையில் பூர்வீக வரலாறு கந்தன் படையெடுப்பு காலம் தொட்டு இராமாயண காலத்துடன் இணைப்பு பெற்று உள்ளதாக நம்பப்படுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.