ஆடி அமாவாசை அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு!

ஆடி அமாவாசை அளவற்ற புண்ணியம் தரும் முன்னோர் வழிபாடு!

 

முன்னோர் வழிபாடு மகத்தான ஒன்று. நம் ஞானநூல்கள் பலவும் நமக்கான பலவகைக் கடமைகளைச் சுட்டிக்காட்டி, அவசியம் அவற்றைச் செய்யும்படி பணிக்கின்றன. அவற்றில் முன்னோர் வழிபாடும் ஒன்று. திதி கொடுப்பது மற்றும் அமாவாசை தர்ப்பணம் அளிப்பது முன்னோரின் ஆசியையும் அருளையும் பெற்றுத் தரும்.

நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது. பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச்செய்து, நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும்.

முன்னோர் ஆராதனைக்கு உகந்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை. இதை முழுமைப் பெற்ற நாள் என்பார்கள் பெரியோர்கள். சந்திரன் தேய்பிறையிலிருந்து விடுபட்டு வளர்பிறைக்குச் செல்லும் நாள் என்பது சிறப்பு. ஆக, இந்த நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்யலாம். அதிலும் குறிப்பாக வருடத்தில் மூன்று அமாவாசைகள்… தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.

 

தேவகணங்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக உத்தராய னமும், பித்ருக்களுக்கு அதிக பிராதான்யம் உள்ள நாள்களாக தட்சிணா யனமும் திகழும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இவற்றில் தட்சிணா யன புண்ணிய காலத்தில் வருவது ஆடி அமாவாசை.

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பையும் முக்கியத்துவம் பெறும்.

21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்க என்ன வழி?

தர்ப்பையின் மகிமை!

பூமியில் பலவகை புற்கள் முளைத்துவந்தாலும் தர்ப்பைக்குத் தனி சிறப்புண்டு. விசேஷ குணம் நிரம்பிய தர்ப்பை ஆகாயத்தில் தோன்றிய தாக ஒரு நம்பிக்கை உண்டு. இதன் ஒரு முனையில் பிரம்மனும், மறு முனையில் சிவனாரும், நடுவில் பெருமாளும் வாசம் செய்வதாக நம்பிக்கை. தர்ப்பைக்குத் திருப்புல், தெய்வப் புல், அமிர்த வீர்யம் ஆகிய பெயர்கள் உள்ளன.

மனித முயற்சிகள் அதிகமில்லாமல், சுயம்புவாகத் தோன்றும் தர்ப்பை, நிலத்தில் வாடி விடாத, நீரில் அழுகிவிடாத தன்மையுடையது. ஆன்மா தோன்றுவது போன்று தானே தோன்றி, தானே வளரும் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். அதிக உஷ்ணத் தன்மைகொண்ட தர்ப்பை அமாவாசை மற்றும் கிரகணக் காலங்களில் அதிக வீர்யத்துடன் திகழும் என்பதால், தர்ப்பணத்துக்குத் தர்ப்பைப் புல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

ஆடி அமாவாசை – பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனைஆடி அமாவாசை – பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனை
எள் தர்ப்பணம்!

எள் என்பதை வடமொழியில் திலம் என்று கூறுவார்கள். விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். திலம் என்று சொல்லப்படும் எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடுமாம்.

இந்த எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில் பித்ருக்களை – மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

ஆடி அம்மன் தரிசனம் – சிக்கல்களைத் தீர்ப்பாள்.

தவிர்க்க வேண்டிய காய்கள்!

அதேபோல், திதி, சிராத்த, தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது. பாகற்காய் 100 வகை காய்களுக்கும், பிரண்டை 300 வகை காய்களுக்கும், பலாக்காய் 600 வகை காய்களுக்கும் சமம் என்பார்கள். ஆக, இந்த மூன்று காய்களையும் அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயையும் சேர்ப்பது அவசியம்.

யார் யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும்?

யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு.

மறைந்துவிட்ட தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேருக்குத் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

புண்ணிய தலம் – தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழலில் வீட்டிலேயே முன்னோரை ஆராதிக்கலாம். படையல் இட்டு அவர்களை வழிபட்டு முன்னோரின் ஆசியைப் பெறலாம். பசுக்களுக்கு அகத்திக் கீரை உண்ணக் கொடுப்பது மிகவும் சிறப்பு.

 

ஆக்கம்

செல்வம் கஜந்தன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.