ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது.

குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்