சம்மாந்துறையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21வது நினைவேந்தல் நிகழ்வு.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 21வது நினைவேந்தல் நிகழ்வு சுகாதர நடைமுறைக்கு அமைவாக, மட்டுப்படுத்தப்பட்டவர்களின் பங்கு பற்றுதலுடன் சம்மாந்துறையில் இன்று (16) இடம்பெற்றது.
இதனை நினைவுகூரும் வகையில் சம்மாந்துறை வேர்கள், விழுதுகள் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆனும், துஆப் பிரார்த்தனையும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்றது.
நினைவேந்தல் உரையினை முன்னாள் சம்மாந்துறை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மௌலவி ஏ.சீ.எம்.புஹாரி நிகழ்த்தியதுடன், துஆப் பிரார்த்தனனயினை மௌலவி ஏ.எம்.இர்பான் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர்.ஏ காதர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள், உலமாக்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்