கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பான ...

மேலும்..

இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நேற்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளன உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு நேற்று பிற்பகல் 5 மணியளவில் இரணைமடு விவசாய சம்மேளன கட்டடத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநராக இருந்த காலம் தொட்டு இரணைமடு விவசாய சம்மேளனத்தினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(17/09/2020)

மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சில ...

மேலும்..

காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனேடியப் பிரதமர் தலையிடவேண்டும் – தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!!

இலங்கையில் காணாமல்போனவர்கள் விவகாரத்தில் கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலையிடவேண்டும் என கனடாவில் உள்ள தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இறைமையுள்ள நாடு அல்லது அதன் தலைவருக்கு எதிராக இன்னொரு நாட்டில் நீதிமன்ற நடவடிக்கையை எடுப்பதைத் தடுக்கும் விடுபாட்டுரிமையை கனடாப் பிரதமர் நீக்க ...

மேலும்..

தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்!!!(PHOTOS)

மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ...

மேலும்..

விடுதலைப்புலிகளை விட சிவாஜிலிங்கம் படுமோசம் – ராஜபக்ச அரசு கடும் சீற்றம்!!

"பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை விடப் படுமோசமானவர் சிவாஜிலிங்கம். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது." - இவ்வாறு அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். நீதிமன்றத்த தடையுத்தரவை மீறித் திலீபனை அஞ்சலித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிஸாரினால் ...

மேலும்..

விடுதலைப்புலிகளை அஞ்சலிப்பது ஆபத்து – இப்படி தமிழர்களை எச்சரிக்கின்றது சஜித் அணி!!

"தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து வீண்விளைவுகளைச் சந்திக்க வேண்டாம் என்று வடக்கு, கிழக்குத் தமிழர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். தியாக தீபம் திலீபனின் ...

மேலும்..

திலீபனும் பயங்கரவாதியே; நினைவு கூருவோர் கைது – பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்!!!

"இலங்கையில் பயங்கரவாதிகளை நினைவுகூர ஒருபோதும் அனுமதியில்லை. திலீபனும் பயங்கரவாதியே. எனவே, அவரை நினைவுகூருவோர் உடன் கைதுசெய்யப்படுவார்கள்." - இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் விடுத்துள்ள தடையுத்தரவு தொடர்பிலும், ...

மேலும்..

மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இன்னும் முடிவு இல்லை – ராஜபக்ச அரசு அறிவிப்பு!!!

"மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பது தொடர்பில் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ் தெரிவித்தார். மாகாணச பை முறைமை நீக்கப்படவேண்டும் என முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ...

மேலும்..

’20’ திருத்த வரைவுக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்லலாம் – அமைச்சர் நாமல் வெளிப்படைப் பேச்சு!!!

"அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாட்டு மக்கள் எவரும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம். ஓர் இனத்தை இலக்காகக் கொண்டு 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. பல்லின மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் கருத்தில்கொண்டு புதிய அரசமைப்பு உருவாக்கப்படும்." - இவ்வாறு விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார ...

மேலும்..

’20’ ஐ வரைந்தவர் யார் என்று சொல்ல ஆளுந்தரப்புக்கு முதுகெலும்பு இல்லை – சஜித் அணி போட்டுத் தாக்கு!!!

"அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை உருவாக்கியவர் யார் என்பதைக் கூறும் அளவுக்கு ஆளும் தரப்பினருக்கு முதுகெலும்பு இல்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார். இதேவேளை, ஜனநாயக ஆட்சி முறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி , சர்வாதிகார ...

மேலும்..

20′ மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்து!!

"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்ற அவசரம் காண்பிப்பதற்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை. எனவே, அது குறித்து ஆராய்வதற்காக பிரதமரால் நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்." - இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அவர் ...

மேலும்..

விவசாயி மகன் ஜப்பான் பிரதமரானார்!!!!

ஜப்பானின் புதிய பிரதமராகயோஷிஹிடே சூகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹிடே சூகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் ...

மேலும்..

அரசமைப்பின் ’20’ திருத்த வரைவு குறித்த ஐ.நாவின் கருத்துக்கள் தேவையற்றவை: – மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு – இலங்கை பதிலடி!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களுக்குக் கண்டனம் வெளியிட்டுள்ள அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த ஆணையாளரின் கருத்துக்கள் தேவையற்றவை எனவும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ...

மேலும்..