கண்டியில் மதுபோதையிலிருந்த 6 பிக்குகள் கைது

கண்டி நகரின் மத்தியில் மதுபோதையில் பிக்கு அடையாள அட்டையுடன் இருந்த ஆறு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை கண்டி பொலிஸாரிடம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர்கள் பல விகாரைகளில் பணிபுரியும் பிக்குகள் என தெரியவந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் குடிபோதையில் இருந்த ...

மேலும்..

தேர்தல் கடமை வாகனங்களுக்கு எண்ணெய் இல்லை;

தேர்தல் கடமைகளுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு போதிய எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கனிய எண்ணெய் ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்..

வசந்த முதலிகே விடுதலை !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள ...

மேலும்..

மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

ஏனைய சர்வதேச நகரங்களுக்கு இணையாக கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் வகையில் மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.. இத்திட்டத்தின் ...

மேலும்..

சுதந்திர தின விழா ஒத்திகை நாளை முதல்: 20 வீதிகள் மூடப்படும்

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (01) முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முடிவுக்கு வந்த வழக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் இனிவரும் காலங்களில் விசாரணைக்கு எடுப்பதில்லை என கூறி வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற ...

மேலும்..

வரி விதிக்கும் அரசு – கடுமையாக சாடும் சஜித்!

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்,மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார். அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை கையாளும் திறன்அரசாங்கத்திற்கு இல்லை என ...

மேலும்..

விதுர விக்ரமநாயக்கவுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக செந்தில் தொண்டமான் பிரதமரிடம் 3 கோரிக்கைகளை முன்வைப்பு!

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக்கொண்டார். இதன்போது பிரதமரிடம் செந்தில் தொண்டமான் 3 கோரிக்கைகளை இலங்கை ...

மேலும்..

சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தின் புனிதத்தை ...

மேலும்..

அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு

இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், சிறப்பான முறையில் கடமையாற்றாத ஊழியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு ...

மேலும்..

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும் – எம்.பி.இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ...

மேலும்..

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள்

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஊழலை ஒழிக்கும் வரை எந்த தேசமும் சுதந்திரம் அடையாது என்றும், அன்றைய தினம் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்புக்கொடி ஏற்றுமாறும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படும் ...

மேலும்..