சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார் – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் விரும்பினார்- சிறிகாந்தா தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். அதேவேளை, அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எனது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அண்மையில், சாவகச்சேரியில் இடம் பெற்ற ...

மேலும்..

வேலன் சுவாமியின் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளுக்காக வழக்காளிகள் சார்பில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராசா முன்னிலையாகியிருந்தார். கடந்த 15 ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு ...

மேலும்..

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே எமக்கு சுதந்திர தினம்- க.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ...

மேலும்..

கரிநாளாகும் சுதந்திரதினம் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி பாரிய மக்கள் பேரணி!!

'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் ...

மேலும்..

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் என ஆனோல்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்!

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார். யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று சபை ...

மேலும்..

தாய் நாட்டை நேசிப்பவர்கள் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறமாட்டார்கள் – ரணில்!

இலங்கையில் பிறந்து, தாய்நாட்டை நேசிக்கும் எவரும் சுதந்திர தினத்தை கருப்பு தினம் எனக் கூறமாட்டார்கள் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ...

மேலும்..

கனடா சென்ற மேயர் சரவணபவன் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு !

பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுவருகின்றது. தேர்தல் காலம் என்பதாலும், முதல்வர் சரவணபவன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதினாலும், அவர் மீதான ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளது

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோரிய மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் – பௌத்த தேரர்கள் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் ...

மேலும்..

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா வழங்கியுள்ளது -சுசில்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி தற்போது நாட்டிற்கு வந்துள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ...

மேலும்..

தேர்தல் வேண்டாம் -தேர்தல் ஆணைக்குழு முன் போராட்டம்

இந்த நேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கூடாது எனக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய லங்கா கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது ...

மேலும்..

ஜனவரியில் அரசின் வரி வருமானம் ரூ.158 பில்லியன்; செலவு ரூ.367 பில்லியன் -பந்துல குணவர்தன

ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபா மாத்திரமே வரியாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ...

மேலும்..