Breaking news

ஞானசார தேரர் நாளை விடுதலையா?

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை வெசாக் ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் , அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்று 17 மணி நேரத்திற்கு பின்னர் ஹெலிகொப்டர் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன .இந்த நிலையில் குறித்த விபத்தில் ஹெலிகோபிடரில் பயணித்து எவரும் உயிர் பிழைத்திருக்க ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி – தடை உத்தரவை நீக்கிய நீதிமன்றம்

(கஜனா) முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குவதற்கு நீதிமன்றங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவு கஞ்சி வழங்கும் செயற்பாடு வடகிழக்கில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதற்கு போலீஸ் தரப்பினரால் தடை உத்தரவும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கல்முனை ...

மேலும்..

முன்னாள் அமைச்சரின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

மேலும்..

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமதுக தேசிய அடையாள அட்டைளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உட்பட ஏனைய சில அலுவவலகங்கள் நாளை மதியம் வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பத்தரமுல்லை பிரதான அலுவலகம் ,காலி, குருநாகல், வவுனியா மற்றும் ...

மேலும்..

ஐவருக்கு சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி அந்தஸ்த்து

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சிரேஷ்ட சட்டவாதிகள் ஐந்துபேருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி” (Senior Instructing Attorneys-at-Law) அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன ...

மேலும்..

குறைக்கப்பட்ட சீமெந்து விலை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்தின் படி ஒரு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை ...

மேலும்..

இலங்கையை வந்தடைந்தார் இப்ராஹிம் ரைசி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்கமைய  ...

மேலும்..

தியத்தலாவ விபத்தின் சாரதிகளுக்கு விளக்கமறியல்

நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் ...

மேலும்..

மாணவர்களுக்கான அரிசி விநியோகம் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

ரயிலில் மோதி 9 வயது சிறுவன் பலி

தாயிக்கு தெரியாமல் சைக்கிள் வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை – முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   விபத்தில் உயிரிழந்த சிறுவன் மொரட்டுவெல்ல – க்ளோவியஸ் மாவத்தையை வசிகிப்பிடமாகவும் மொரட்டுவை ஜன ஜயா ...

மேலும்..

நபர் ஒருவருடன் விடுதிக்கு சென்ற 23 வயது யுவதி சடலமாக மீட்பு..

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். நேற்று (10) மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வலப்பனை ...

மேலும்..

மருதடி விநாயகரின் சப்பரத் தேர் திருவிழா

யாழ்ப்பாணம் - மானிப்பாய்,  மருதடி விநாயகர் ஆலய சப்பரத வெள்ளோட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.   எதிர்வரும் சனிக்கிழமை இரவு சப்பர திருவிழா இடம்பெறவுள்ளது.   மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா இடம்பெறும். தேர் திருவிழா அன்று காலை 10 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி, வசந்தமண்டப ...

மேலும்..

பேருந்துவொன்று மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்து, இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்!!!

கதுருவலயிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாக்கியுள்ளது. சேத விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை ! News update..... பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயம் ...

மேலும்..

வெளியானது 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள்

ஐந்தாம் வகுப்பில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 6ஆம் வகுப்பிற்கு பிரபல பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 2022 இல் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூங்களிலான பாடசாலைகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் ...

மேலும்..