சிறப்புச் செய்திகள்

யாழில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

யாழ். கோண்டவில் பகுதியில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிக்க அனுமதி!

யாழ்.பல்கலைக்கழக பிரதி துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்.பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் ...

மேலும்..

ஒக்டோபர் 20 இல் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிட தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை பல்துறை சார்ந்த 32 ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்

ஜனாதிபதியாக தான் ஆட்சிபீடம் ஏறும் பட்சத்தில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை, எந்தவொரு அரசாங்கமும் அதிகரிக்காத வகையில் அதிகரிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தியதலாவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

தேர்தல் பரப்புரையில் இராணுவத் தளபதி: கோட்டாவுக்கு எதிராக முறைப்பாடு

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்த கருத்தை பயன்படுத்தி பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவருக்கு எதிராக தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் முறைப்பாடு வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக 2009 ஆண்டு டிசம்பர் 28 ...

மேலும்..

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பரிசளிப்பு விழா

கரவெட்டி யாக்கரு சித்தி விநாயகர் பாடசாலையின் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாணசபை முன்னாள் ...

மேலும்..

சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட்

யாழ்ப்பாணம் சயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழா நேற்று (13) அக்கடமி வளாகத்தில் அதன் இயக்குநர் சரா புவனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். இக் கௌரவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

மீனவ சமூகத்தை சேர்ந்த ஒருவரும் தேர்தலில் களமிறங்க வேண்டும்- சப்ராஸ் மன்சூர்

மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஒருவர், அந்த சமூகத்தில் இருந்தே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டு, மாநகர சபை செல்ல வேண்டுமென தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்துள்ளார். 22 நாட்களின் பின்னர் ...

மேலும்..

கடும் காற்று – 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிப்பு

குருநாகல் மாவட்டத்தில் 75000 இற்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். பலத்த காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரியபொல, நிக்கவரெட்டிய, கொபேய்கனே, கல்கமுவ உள்ளிட்ட பகுதிகளிலேயே ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல்: சட்டவிரோதமாக போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர், சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ (மஹிந்த ராஜபக்ஷவின் மகன் அல்ல) சட்டவிரோதமாக போட்டியிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்களில் ஒருவராக தேசிய ஒற்றுமை அமைப்பின் சார்பாக சட்டத்தரணி ...

மேலும்..

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு – 5ஆம் சுற்று பேச்சு ஆரம்பம்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஐந்தாம் சுற்று  பேச்சு சற்று முன்னர் யாழில் ஆரம்பமாகியுள்ளது. இந்த சந்திப்பு யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகியது. இந்த சந்திப்பில் ...

மேலும்..

இனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்- ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாத பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார். தற்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காத்தான்குடியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு ...

மேலும்..

தனித்து போட்டியிட்டால் சுதந்திரக் கட்சியால் வெற்றியடைய முடியாது – பிரதீபன்

ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கினால் வெற்றிபெற முடியாது என்ற காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவளிக்க, கட்சி தீர்மானித்ததாக சுதந்திரக் கட்சியின் நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

நிறைவுக்கு வருகின்றது விசாரணை!

2008 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகள் அடுத்த வாரமளவில் முடிவுக்கு வர உள்ளது. அத்தோடு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பதுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் ...

மேலும்..

கோட்டாபய பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை வழங்குவார்- கிசான்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் பெருந்தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவாரென அருனலு மக்கள் முன்னணியின் தலைவர் கே.ஆர்.கிசான் தெரிவித்துள்ளார். நுவரெலியா- டிக்கோயாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..