சிறப்புச் செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடமிருந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ...

மேலும்..

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம்!

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடருக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கான ஆசனங்களை பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆளுங்கட்சி நாடாளுமன்ற ...

மேலும்..

இலங்கையில் புதிய செயற்திட்டங்களை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிவில் சமூகத்தினருக்காகவும் 7 புதிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள், சட்டவாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தமது அமைப்பின் முக்கிய நோக்கம் என அந்த ...

மேலும்..

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை!

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகவுள்ளார். இன்று(ஞாயிற்றுக்கிழமை) அவர் இவ்வாறு முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, அவரை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சுவிஸ் தூதரக பெண் ...

மேலும்..

தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அவதானம்!

தேர்தல் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதுடன், சபாநாயகருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இது குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் உள்ளூராட்சி ...

மேலும்..

பயத்தை விடுத்து நம்பிக்கை, தைரியம் வேண்டும் – சிறிதரன்

நம்பிக்கையையும் தைரியத்தையும் கைவிட்டால் அடைய நினைக்கும் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதரன் மேலும் கூறுகையில், “இன்று ...

மேலும்..

நாளை முதல் சிமெந்தின் விலை 100 ரூபாவால் குறைகின்றது!

வரி குறைக்கப்பட்டதை அடுத்து சீமெந்து பை ஒன்றின் விலை ரூபாய் 100ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த விலை குறைப்புநாளை திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அடுத்த வாரத்தில் இருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து ...

மேலும்..

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக ஆகக்கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தகவல் தொடர்பாடல் ...

மேலும்..

முதன்முறையாக அடிப்படைவாதிகளுடன் மண்டியிடாத அரசாங்கம் – கெஹெலிய

அடிப்படைவாதிகளிடம் மீண்டும் மண்டியிட நேர்ந்தால் தாம் தனிப்பட்ட அரசியலில் இருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார். இதன்போது அவர் கூறுகையில், “முதன்முறையாக அடிப்படைவாதிகளின் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக அச்சமடையப் போவதில்லை – சம்பிக்க ரணவக்க

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரை வாகன விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கடவுச் சீட்டு ...

மேலும்..

இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு டக்ளஸ் உறுதியளிப்பு

இடைநிறுத்தப்பட்டள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் நியமனம் தொடர்பாக அமைச்சரவையில் எடுத்துரைப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்

ஆலயங்கள் மக்களுக்கு ஆன்மீகத்தை போதிப்பது மட்டுமல்லாது ஆன்மீக கல்வியோடு எமது மக்களின் வருமானத்தை பெருக்கக்கூடிய செயல்களிலும் இறங்க வேண்டுமென நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம்- நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 15ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் தேவஸ்தானம், ...

மேலும்..

அமெரிக்காவில் அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை!

அமெரிக்காவில் கூகிள் தேடுபொறி ஊடாக அதிகம் தேடப்பட்ட நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான கூகுள் தேடுதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அதிகமாக தேடப்பட்ட இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்களில் நூற்றுக்கு 90 வீதமானோர் கூகுள் கணக்குகளை பயன்படுத்துகின்ற நிலையில் அவர்களில் 87 வீதமானோர் இணையம் ...

மேலும்..

வெற்றியை இலக்காக கொண்டு ரணில் செயற்படுவார் – ஹேசா விதானகே

பொதுத்தேர்தலில் வெற்றியை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஆசியான் நாடுகளின் தூதுவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தூதுவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் மற்றும் கொன்சியூலர்கள் இந்த சந்திப்பில் ...

மேலும்..