சிறப்புச் செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் ...

மேலும்..

தெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது!

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்துள்ளார். இவர், நேற்று மதியம் 12 மணியளவில் நெடுந்தீவின் தென்பகுதி கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்ச சூழ்நிலை நிலவிவரும் நிலையில் குறித்த இந்தியப் பிரஜை இவ்வாறு வந்துமுள்ளமை ...

மேலும்..

கோட்டாவின் ஹிட்லர் முகத்தை முன்னிறுத்தினால் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்- விக்ரமபாகு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதிகாரத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ...

மேலும்..

கருணா ஒரு ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்  அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அதை அவர் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மஹாலட்சுமி

எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள் என மன்னார் மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள மாதர் ஒன்றியத்தின் மாவட்ட அலுவலகத்தில்  இன்று   (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் – ஜனகன்!

மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் வி.ஜனகன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் தவறியுள்ளது- கிளிநொச்சியில் சஜித் குற்றச்சாட்டு

கொரோனாவினால் பின்னடைவை சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பாமல் அரசாங்கம் தான்தோன்றிதனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக ...

மேலும்..

மன்னார் தேர்தல் தொகுதியில் வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம்!

எதிர்வரும் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெற இருக்கும் இலங்கையின் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார் தேர்தல் தொகுதிக்கான பிரதான வாக்கு எண்ணும் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் அதிகாரி ஜெ.ஜெனிற்றன் தெரிவித்துள்ளார் வழமையாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் பத்து ...

மேலும்..

கொழும்பில் ரணில் அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயார் – சுஜீவ

கொழும்பில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தியைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திற்குப் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 1700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த முதலாம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரையான காலப்பகுதியில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக நடத்தப்பட்ட சோதனைகளின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு விரைவில் கருகும் – வேலுகுமார்

ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஒகஸ்ட்  5 ஆம் திகதிக்கு பின்னர்   கருகிவிடும் என்பது உறுதி ”  என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமை திரும்பியது!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் காரணமாக வரையறைகளுக்குட்பட்ட நிலையில் செயற்பட்டு வந்த திணைக்கள செயற்பாடுகளை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு  கடந்த புதன்கிழமையில் ...

மேலும்..

மஹிந்தவை பிரதமராக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட சதி- வஜிர

சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு குழுவினர், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்குரிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அநுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தலாவ-தம்மென்னாவ சுதந்திர பூங்காவில் இந்நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி அப்பகுதி ...

மேலும்..