சிறப்புச் செய்திகள்

மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் – வேலுகுமார்

மக்கள் மதிநுட்பத்துடன் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார். கண்டியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது ...

மேலும்..

வவுனியாவில் போதைப்பொருளுடன் பெண் கைது

வவுனியாவில் போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா- மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மகாறம்பைக்குளம் பகுதியில் அவர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போதே  போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 ...

மேலும்..

கந்தளாயில் ஒரு பிள்ளையின் தந்தை தற்கொலை

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 76/1, பேராறு- கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஏ.றுமைஸ் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  மனைவி  ...

மேலும்..

அநுரகுமார, ஷானி அபேசேகர ஆகியோர் ஆணைக்குழுவில் ஆஜராகவேண்டிய அவசியம் இல்லை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அநுரகுமார திஸாநாயக்க, ஷானி அபேசேகர மற்றும் ஜனக பண்டார ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தமக்கு ...

மேலும்..

கருணா 3000 பேரை கொன்றதாக தெரிவித்த கருத்து உட்பட முக்கிய பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது

மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பணவீக்கம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட ...

மேலும்..

அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம்- அராலி ஓடைக்கரைகுளம் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர், பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஓடைக்கரைகுளம் தடுப்புச் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அரசே நாட்டின் மதிப்பை அதிகரித்தது – பிரதமர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைமையிலான அரசாங்கத்தினாலேயே புதிய அதிவேக நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை அமைக்கப்பட்டு நாட்டின் மதிப்பு அதிகரித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கினிகத்தேன பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ...

மேலும்..

தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்த இறுதி முடிவை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் அந்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 15 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்து இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த வளங்களை சரியாக பயன்படுத்த வேண்டும் – சம்பிக்க

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கைகளை அரசாங்கம் தவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் ...

மேலும்..

தவறான தகவல்களை வழங்கி இளையோரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சி- மாவை

வடக்கு– கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்கி, அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள அரசின் ஆதரவு கட்சிகள் முயற்சிக்கின்றன என தமிழ் அரசுக்கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலைய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் குறித்த கொரோனா தொற்றாளர் சென்ற இடங்கள் தொடர்பாக அனைத்து தகவல்களும் புலனாய்வு ...

மேலும்..

தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்வது மாத்திரமே ஐ.தே.க.வின் இலக்கு- மஹிந்த

தேசிய சொத்துக்களை சர்வதேசத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே இலக்காக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிமடையில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  ...

மேலும்..

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று காலை கைது செய்தனர். இவர் தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் எனவும் சுமார் 10 வருடங்களாக அவர் இவ்வாறான துஷ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் ...

மேலும்..

சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு அதிகாரம் கிடைத்தபின்னர் செய்கையில் பதிலடி- ஜீவன்

என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும் செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தன்னை நம்புவதாகவும் மக்களுக்கும் தன்மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹற்றன் ...

மேலும்..