சிறப்புச் செய்திகள்

வரிகள் குறைக்கப்பட்டுள்ளமையால் சுதேச விவசாயிகள் மகிழ்வடைந்துள்ளனர் – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக வரிகள் குறைக்கப்பட்டுள்ளமையால் சுதேச விவசாயிகள் இன்று மகிழ்ச்சியாக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில், “வட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான அமைப்புக்கள் இன்னும் வெளியில் செயற்படுகின்றன – ஞானாசார தேரர்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குக் காரணமான அடிப்படைவாத அமைப்புக்கள் இன்னும் வெளியில் சுதந்திரமாக செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞான சார தேரர் தெரிவித்தார். மேலும், இவர்களை அரசாங்கம் சரியாக இணங்கண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் ...

மேலும்..

தமிழர் ஊடக மையத்தின் வேண்டுகோளை ஏற்று காரைதீவில்இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வேலை திட்டம் அமுல் – 72 பயனாளிகளுக்கு சூரிய மின்கலங்கள் வழங்கி வைப்பு

ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி என்கிற மனித நேய ஸ்தாபனத்தால் ரி. தர்மேந்திரா தலைமையிலான தமிழர் ஊடக மையம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய காரைதீவை சேர்ந்த 72 வறிய மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு சூரிய ...

மேலும்..

ரயில்களில் GPS கருவி பொருத்தப்படவுள்ளதாக அறிவிப்பு!

ரயில்களில் GPS கருவி பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பணிப்புரையை, ரயில் சேவைக்குப் பொறுப்பான அமைச்சு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கருவிகள் அடுத்த வாரமளவில், ரயில்களில் பொருத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம், ரயில்களின் வருகை மற்றும் புறப்படுகை ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ரயில் ரிக்கெற்களுக்குப் ...

மேலும்..

கட்சி தலைமையையும் ரணில் விட்டுக்கொடுக்கவேண்டும் – இராதாகிருஷ்ணன்

(க.கிஷாந்தன்) எதிர்கட்சி பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியமையையிட்டு நாங்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு ...

மேலும்..

ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை

நாட்டின் சில இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், அதிகளவானவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையிலேயே சீரற்ற காலநிலை ...

மேலும்..

சுவிஸ் அதிகாரி கடத்தல் தொடர்பாக நன்கு அறிந்தவர் ராஜித்த- மஹிந்த

இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ராஜித்த சேனாரத்னவே நன்கு அறிவாரென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் அதிகாரி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் ...

மேலும்..

அநாதரவாக வீசப்பட்ட சிசு மீட்பு – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் – குருணாகல் பிரதான வீதியின் 4 ஆம் கட்டைப் பகுதியில் கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் அநாதரவாக வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட பிறந்து ஒரு நாளேயான சிசு மீட்கப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவ்வீதியினால் சென்ற ...

மேலும்..

வெள்ளப்பாதிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் விசேட கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெறுகிறது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் குறித்த கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது. இந்தக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், மாவட்ட ...

மேலும்..

நேபாளம் சென்ற இலங்கை வீரர்களுக்கு டெங்கு காய்ச்சல்

13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக நேபாளம் சென்ற இலங்கையின் ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆறு பேரும், நேபாளத்தின் கத்மண்டு, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஓருவர் தீவிர சிகிச்சைப் ...

மேலும்..

நிமோனியா காய்ச்சலினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. பதல்கும்புர மொனராகலை பகுதியினை சேர்ந்த சிறில் திசாநாயக்க (வயது 50) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவர் ...

மேலும்..

இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி திருமதி உலக அழகியாக தெரிவு

2020 ஆம் ஆண்டு திருமணமான உலக அழகியாக இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி தெரிவாகியுள்ளார். இம் முறை திருமணமான உலக அழகி போட்டி அமெரிக்காவின் லொஸ் வேகஸில் நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட திருமதி கரோலின் ஜூரி உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.

மேலும்..

மட்டக்களப்பில் 35,756 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்பு – அரச அதிபர்

சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களை சேர்ந்த 10,738 குடும்பங்களை சேர்ந்த 35,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இதுவரை சுமார் 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ...

மேலும்..

பிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை!

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரித்தானிய தம்பதியிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்ல பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பிரித்தானிய தம்பதியினரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் பயணித்த வாகனத்தின் சாரதியே பணத்தினை கொள்ளையடித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 10 இலட்சம் ரூபாய் ...

மேலும்..

மழையுடன் கூடிய காலநிலை – பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல நீர்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலா வாவியின் இரு வான் கதவுகளும், ராஜாங்கனை நீர் தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் சென்று புகைப்படங்கள் எடுப்பதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ...

மேலும்..