பாற்சோறுக்கு சர்வதேச ரீதியில் பாராட்டு

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா சமையல் போட்டியான மாஸ்டர்செஃப் அவுஸ்திரேலியாவில் (MasterChef Australia) இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பாற்சோற்றின் விளக்கம் மற்றும் அதன் சுவைக்காக அவர் இவ்வாறு  நடுவர்களால் பாராட்டப்பட்டுள்ளார்.

பாற்சோற்றுக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு – பாற்சோற்றை ஒரு கொண்டாட்டத்திற்கு ஒப்பிட்ட நடுவர்களில் ஒருவர் பாற்சோற்றை ஒரு ஓவியம் போன்றது என்று கூறியுள்ளார்.

சவ் என அன்புடன் அழைக்கப்படும் சாவிந்திரி பெரேரா, பாற்சோறு மற்றும் இலங்கைக் கருப்பட்டி சேர்க்கப்பட்ட தேங்காய் துருவல் ஆகியவற்றை சமைத்துள்ளார்.