பிரதான செய்திகள்

தாமரைப் பூ பறிக்கச்சென்ற இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - தாமரைக்குளம் ஏரியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரண்டு இளைஞர்கள் படகில் பயணித்த நிலையில், படகில் இருந்த ஓட்டையுடாக நீர் கசிந்து படகு மூழ்கிய நிலையில், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்த ...

மேலும்..

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா..T

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா   யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் நடந்த பதற்றம் – வன்முறையால் ஒருவர் உயிரிழப்பு..T

கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ...

மேலும்..

நீர் விநியோக கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90 ஆயிரத்து 617 பேரின் நீர் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நீர்க் கட்டணங்களை காலம் தாமதமாகியும் ...

மேலும்..

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை அடையாளம் காண வந்த தோழி..T

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார். சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று ...

மேலும்..

இலங்கையில் வைத்தியசாலைகளில் தொடரும் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்..T

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார ...

மேலும்..

நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் மாயம்..T

களனி கேஜ் அம்குகம பிரதேசத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம், நேற்று (16.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனைய இரண்டு இளைஞர்களும் தனது மற்றைய நண்பர் காணாமல் போனதை அறிந்து ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..T

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ...

மேலும்..

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு..T

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு   முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவிய லாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து ச மூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை ...

மேலும்..

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை: உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்..T

பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் நேற்று (16.07.2023) இரவு வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி ...

மேலும்..

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் – ஊசியால் தொடரும் சோகம்..T

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார். குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு ஒவ்வாமைக்கு உள்ளான நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையின் தீவிர ...

மேலும்..

இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் !..T

ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது ...

மேலும்..

கவனமாக இருங்கள்! வாக்னர் கூலிப்படை தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை..T

வாக்னர் கூலிப்படை தலைவரை கவனமாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை செய்தியொன்றினை வழங்கியுள்ளார். ஐரோப்பா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட நிலையில் ஜோ பைடன் வாக்னர் கூலிப்படை தலைவர் தொடர்பில் தமது கருத்தை பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் ஆயுதக்கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், ...

மேலும்..

தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமி மாயம்! கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் அவசர கோரிக்கை..T

கொழும்பு - தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சிறுமி நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் ...

மேலும்..

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சிறுவன் கைது..T

தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கொடுவ - தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ ...

மேலும்..