இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!

  மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் சாண்டிலே எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) விஜயம் செய்து, சுமார் 400 வருடங்கள் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார். அங்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகருடன் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை ...

மேலும்..

நெல்லை உட்கொண்ட காட்டு யானையின் தாக்குதலில் சுவர் இடிந்து வீழ்ந்து இளைஞர் பலி!

சிகிரியா கிபிஸ்ஸ பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில்  அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சீகிரிய கிபிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த அவிந்த இஷான் சமரநாயக்க ...

மேலும்..

தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) ஆகியவற்றுடன் ...

மேலும்..

முல்லைத்தீவின் மூத்த தவில் வித்துவான் இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை காலமானார்!

முல்லைத்தீவின் மூத்த கலைஞரும் சிறந்த தவில் வித்துவானுமான இராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை இன்றைய தினம் புதன்கிழமை (29) அதிகாலை காலமானார். முல்லைத்தீவு முள்ளியவளையை நிரந்தர வதிவிடமாக கொண்ட இவர், 'முல்லைக் கலைக்கோன்', 'கலாபூஷணம்', 'முல்லை பேரொளி' ஆகிய விருதுகளை பெற்ற இசை மேதையாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் ...

மேலும்..

யாழ்.நோக்கிச் சென்ற பேருந்துக்கள் மீது அநுராதபுரத்தில் கல் வீச்சு

கொழும்பில் நடைபெற்ற சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் யாழ். நோக்கி வந்த பேருந்து உள்ளிட்ட மூன்று பேருந்துகள் மீது அநுராதபுர பகுதியில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் - நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ...

மேலும்..

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன!

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது மனைவி, ...

மேலும்..

ஓமானில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் பெண் தொடர்பில் பெற்றோர் கூறுவது என்ன?

ஓமானில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த 39 வயதான ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவர் ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். ஆனமடுவ குமாரகம பிரதேசத்தைச் ...

மேலும்..

மாவீரர்நாளில் பொலிஸாரின் நடவடிக்கை நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் இரட்டை நிலையை காட்டுகின்றது

மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் சீர்குலைக்கப்பட்டமை உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் இரட்டை தோற்றம் இவ்வாறான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்கத்திற்கான சிறந்த வழியாக இருக்கக்கூடிய இவ்வாறான நினைவேந்தலைக் கூட அரசாங்கம் அனுமதிக்காவிட்டால், இந்த ...

மேலும்..

ஒழுக்க விழுமியங்களுக்கு மாறாக செயற்பட்டால் பதவி நீக்கலாமாம்! ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டென்கிறார் பந்துல

அமைச்சரவை அமைச்சர் ஒருவர் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து தீர்மானங்களை எடுப்பதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், எதிர்கட்சியுடன் இணைந்து பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஆளும் கட்சியில் ...

மேலும்..

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் மட்டு. விஜயம்!

இலங்கைக்கான தென்னாபிரிக்க நாட்டு உயரஸ்தானிகர் சண்டிலி இ.ஸ்சோல்க் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் கிழக்கின் பிரசித்தி பெற்ற பாடசாலையான ஆங்கிலேயரால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி தேவைகள் குறித்தும் ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சிகள் வெற்றிபெற இடமளிக்கமுடியாது! விஜித ஹேரத் திட்டவட்டம்

பொதுத்தேர்தலை பிற்போடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. 2024 ஆம் ஆண்டு தேசிய தேர்தல்கள் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அவதானம் செலுத்த வேண்டும் ...

மேலும்..

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு சபாநாயகர் நன்றிபாராட்டு!

இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார். சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடமாகாண 7 ஆவது பட்டமளிப்பு விழா!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய வடமாகாணத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா யாழ். சாவகச்சேரி 'பூமாரி மண்டபத்தில்' இடம் பெற்றது. இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை முன்னாள் தலைவரும், இந்து நாகரிகத்துறை பேராசிரியருமான கலாநிதி ...

மேலும்..

மத்திய வங்கியின் நாணய நிலைவறையிலிருந்து 50 இலட்சம் ரூபா மாயமானதை ஏற்றுக்கொள்கிறோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் 'நாணய வழங்கல் நிலைவறையில்' இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை வெகுவிரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதி ...

மேலும்..

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞன் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் ...

மேலும்..