தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த ஒப்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) ஆகியவற்றுடன் தனித்தனியே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த கைச்சாத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் ஆலோசகர் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் எல்டோஸ் மத்யூ புன்னூஸ், பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் ரத்னசிறி களுபஹன, தேசிய வீடமைப்பு அதிகார சபை பொது முகாமையாளர் கங்கனமாலகே அஜந்த ஜனக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்திட்டம் இலங்கையின் 11 மாவட்டங்கள் மற்றும் 6 மாகாணங்களில் செயற்படுத்தப்படவுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதல்கட்ட வீட்டு நிர்மாண திட்டத்தில் சுமார் 46 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டன.

மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டு நிர்மாண திட்டத்தில் சுமார் 4 ஆயிரம் வீடுகளின் வேலைதிட்டங்கள் பூர்த்தியடைந்து வருகின்றது.

இலங்கையுடனான இந்திய அபிவிருத்தி கூட்டுறவில் வீடமைப்பு திட்டங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.