இலங்கை செய்திகள்

பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த 223 பேரும்,  ...

மேலும்..

முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்- சுரேஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

பொதுத்தேர்தல்: சஜித் அணியின் வேட்பாளர்கள் மூவர் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த  3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்குக் கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் ...

மேலும்..

பிரதமர் மஹிந்தவை மெய்சிலிர்க்க வைத்த முதியவர்

பொலன்னறுவை- மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாயை வழங்கி,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என எழுதப்பட்ட கடிதமொன்று அலரி மாளிகைக்கு கிடைத்த ...

மேலும்..

குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி.

குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை தற்போதுள்ள சட்டம் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன குத்தகை வழங்கல் மாபியா தொடர்பாக ...

மேலும்..

மக்களின் குறைகளை தீர்க்க ஒம்புட்ஸ்மன் நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய முறையில் தீர்வுகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து பலரினால் ...

மேலும்..

விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி,  குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  சில ஆயுதங்கள், இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளர். வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு

தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமல் ராஜபக்ஷ

விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார் வவுனியா- போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் செய்த அவர் அப்பகுதியிலுள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்பு  பணிகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த குளமானது 32 மில்லியன் ரூபாய் செலவில் ...

மேலும்..

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்  இந்த விழிப்புணர்வு ஊர்வலம்  இடம்பெற்றது. குறித்த ஊர்வலத்துக்கு முன்னதாக காலை11 மணியலவில், வவுனியா- தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு…

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த  7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து பொலிசார் ஊடாக இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவுக்கு சென்ற நிலையில் கொவிட் 19 தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த பலர் அரசாங்கத்தினால் ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் விடுவிப்பு

வவுனியாவைச் சேர்ந்த 7பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மின்னேரிய இராணுவ முகாமில் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்த  7 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் . மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை ...

மேலும்..

மூன்றிலிரண்டு’ அதுவே இலக்கு! – ‘மொட்டு’வின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் மஹிந்த இடித்துரைப்பு…

"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கான பிரசாரங்களை நாட்டின் சகல பகுதிகளிலும் சுகாதார விதிமுறைகளுக்கமைய நாம் ஆரம்பிக்க வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான ...

மேலும்..

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுங்கள் மக்களிடம் அநுரகுமார வேண்டுகோள்

"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்துக்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக்கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தற்போது அரசுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே, நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு ...

மேலும்..