இலங்கை செய்திகள்

ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது – அஷாத் சாலி

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கத்தின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மணியுடன் நிறைவடையும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 56 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே குறித்த நபர் (60 வயது) நேற்று (வெள்ளிக்கிழமை), கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியரான ...

மேலும்..

அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துள்ளனர்- துரைராஜசிங்கம்

முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மட்டக்களப்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரப் பணிகள் ...

மேலும்..

அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருப்பலி பூஜைகள்

அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) வவுனியா- இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில், மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை…

(க.கிஷாந்தன்) வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே நேற்று (12) 60 வயதுடைய குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். ...

மேலும்..

சிசு கொலை – தாய் தொடர்பில் விசாரணை…

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள் பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 12.06.2020 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் ...

மேலும்..

ரணில் அணியினர் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார் – குற்றம் சுமத்துகின்றார் இராதாகிருஷ்ணன்…

(க.கிஷாந்தன்) "தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. அமைச்சுப் பதவிகளை வகித்து அரசாங்கத்துடன் இருந்தவர்களால் கூட செய்ய முடியாமல் போன பல விடயங்களை எமது கூட்டணி செய்து முடித்துள்ளது. எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணி மீது மக்களுக்கு ...

மேலும்..

460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து 460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ ...

மேலும்..

‘தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது’ – அஷாத் சாலி தெரிவிப்பு…

அரசாங்கத்தின் கொள்கைகளும், போக்குகளும், கோட்பாடுகளும் என்னவென்பது   அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவின் மழுப்பல்கள் தடுமாற்றங்களிலிருந்து தெரிவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று (12) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ...

மேலும்..

பிறந்து ஒரு நாளான சிசுவை குழி தோண்டி புதைத்த பெண்: நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- நோர்வூட், ஜனபதய கொலனி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், பிறந்து ஒரு நாளான சிசுவை வீட்டின் பின்புறத்திலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சந்தேகநபரான பெண்ணை நோர்வூட் பொலிஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக ...

மேலும்..

இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரிப்பு: இம்முறை தமிழர்களின் வாக்களிப்பு வீதம் குறையும் அச்சம்- இரா.துரைரட்ணம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறையுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் யுத்த காலத்தைப் போன்று ...

மேலும்..

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டிங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் ...

மேலும்..

அனைத்து பல்கலைக்கழகங்களின் 4 வது ஆண்டு பரீட்சை ஜூன் 22 முதல் ஆரம்பம்

இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 அன்று அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என பல்கலை மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் 2020 ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் ...

மேலும்..