இலங்கை செய்திகள்

மாவை கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்…

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் ...

மேலும்..

இம் முறை கதிர்காம பாத யாத்திரையாக செல்லும் அடியார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை…

இம் முறை பெரஹர பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது மேலும் இம்முறை எந்தவொரு புண்ணிதஸ் தலங்கள் பெரஹரவில் பங்கு பற்றுவதற்கும் ,பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும். நல்லூர்,திருகோணமலை,மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு மூவர் படுகாயம்; மக்கள் பதற்றம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கின் குலான் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதுடன் இறுதியில் வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூவர் படுகாயம் அடைந்தனர் எனவும், அவர்களில் இருவரின் நிலை ...

மேலும்..

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் – கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை

(க.கிஷாந்தன்) இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக இன்று (14.06.2020) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் மூண்டது. இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சின்மயா மிஷன் ஆன்மீக ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால், இடம்பெயர்ந்தோருக்கான கொரோனா இடர் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க துரித நடவடிக்கை!

கொரோனா பாதிப்பினால் முடக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலையினையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில், அதனை அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால், சகலருக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன்

பாறுக் ஷிஹான் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி ...

மேலும்..

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்: ஆலையடிவேம்பு விசேட செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன்…

பாறுக் ஷிஹான் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும்  தயாராக இருந்தால் மாத்திரமே  ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  ...

மேலும்..

அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – ரிஷாட்

எதிர்வரும் தேர்தல் ஆளுங்கட்சிக்கு மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும்  என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ...

மேலும்..

யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய்

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், ...

மேலும்..

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றி – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஒத்திகை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவருக்கு யாழில் அஞ்சலி

யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒன்று கூடிய முச்சக்கரவண்டி உறுப்பினர்கள் சிலர் இரண்டு நிமிட மௌன ...

மேலும்..

பரந்தனில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் பாதுகாப்பாக செயலிழப்பு

பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் ...

மேலும்..

சட்டவிரோத பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ...

மேலும்..

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் ...

மேலும்..

குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சுரேன் ராகவன்

நாடளாவிய ரீதியாக இயங்கும், சட்டபூர்வமற்ற குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..