இலங்கை செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது ...

மேலும்..

யாழில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது தொண்டமானின் பூதவுடல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று (சனிக்கிழமை) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதவுடல் நேற்று, வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் ...

மேலும்..

இந்தியா, அவுஸ்ரேலியாவிலிருந்து 304 பேர் நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இலங்கைக்கு வர முடியாமல், அவுஸ்ரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேர் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளனர். ரீலங்கன் எயார்லைன்ஸின் 02 விசேட விமானங்கள், இன்று (சனிக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. முதலில் ...

மேலும்..

மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக தமிழ் தேசிய  மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோயில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின் செயலாளர்களாக ...

மேலும்..

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் – ரயில்வே திணைக்களம்

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 19,593 பேர் வேலைக்காக பயணிக்க ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை அடுத்த வாரம் முதல் 5000 க்கும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் அஞ்சலி

றைந்த முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் இன்று (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா- கூமாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின்போது அன்னாரது உருவபடத்திற்கு நினைவு சுடர் ...

மேலும்..

கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்

இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது ...

மேலும்..

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ,மத்திய, வடமேல்மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது களுத்துறை, ...

மேலும்..

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இடையீட்டு மனுதாரரான, சீத்தாவக்கை பிரதேச சபை உறுப்பினர் பிரதீப் குமார சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய, சட்டமன்றத்தை ...

மேலும்..

இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…!

ஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த ...

மேலும்..

மருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக ...

மேலும்..

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தலையில் ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – தவிசாளர் த.தியாகமூர்த்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம் திகதியில் இருந்து தமது பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கும் ...

மேலும்..