இலங்கை செய்திகள்

இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் கடற்படையினர் என்றும் மற்றய 15 பேர் டுபாயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் ...

மேலும்..

எதிர்கட்சித் தலைவர் இல்லம் மீண்டும் சஜித்திற்கு: கோட்டாவின் வெகுமதி?

ஜே.எப்.காமிலாபேகம்-ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது பயன்படுத்திய இலக்கம் 30 என்கிற எதிர்கட்சித் தலைவரது அலுவலகம் தற்போது எதிர்கட்சித் தலைவருடைய இல்லமாக பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அந்த இல்லம் தற்போது சஜித் பிரேமதாஸவுக்கே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர் ...

மேலும்..

ரட்னஜீவன் ஹூல் மீதான அரசாங்கத்தின் அழுத்தம் வெட்கம் கெட்டது – மனோ கணேசன் சீற்றம்

சர்வதிகார போக்குக்கு எதிராக ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில், எங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் முக்கியத்துவத்தை இன்று நாடு உணர்கின்றது. இதன் நடுநாயகமாக தேர்தல் ஆணையகமும், அதன் மூன்று அங்கத்தவர்களும் செயற்படுவதை நாடு அவதானிக்கின்றது. இந்த பின்னணியில் இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், இந்த ...

மேலும்..

கொழும்பில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் சாவு!

கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஒருவரே இந்த நிதி விநியோக செயற்பாட்டில் ஈடுபட்டார் ...

மேலும்..

நீர்த்தேக்கத்தில் பாய்ந்த தமிழ் யுவதி: குதித்துக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி-ஒருவர் பலி!

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?

ஜே.எப்.காமிலா பேகம் பாடசாலைகள் திறந்த பின் மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்து வருவது கட்டாயப்படுத்தப்படாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஒழிப்பு பற்றிய முக்கிய சந்திப்பு நேற்று மாலை சுகாதார அமைச்சில் அமைச்சர் பவித்ரா ...

மேலும்..

சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த ...

மேலும்..

“யுத்த வெற்றிவிழாவை கொண்டாட முடியுமென்றால் ஏன் உயிரிழந்தவர்களை நாம் நினைவு கூரக்கூடாது”

யுத்த வெற்றிவிழா அரசினால் முன்னெடுக்கப்படும்போது ஏன் யுத்தத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவுகூரப்படக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முல்லைத்தீவில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்தலை இக்காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானது அல்ல எனவும் தெரிவித்தார். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

கடமைக்கு காலதாமதமாக வருகைதந்த ஊழியர்களுக்கு பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமை நேரத்துக்குப்பின் வந்த காரணத்தினால் அவர்களை பதிவேட்டில் கையெழுத்து இடுவதற்கு அனுமதி வழங்காததையடுத்து அவர்கள் வைத்தியசாலை நிர்வாகப் பிரிவின் முன் ஆர்ப்பாட்டத்தில் இன்று வியாழக்கிழமை (21) ஈடுபட்டனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொலநறுவை ...

மேலும்..

கோட்டாபய வீராப்புப் பேசலாம்; ஆனால், பாதிப்பு இலங்கைக்கே! – சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு

"இலங்கை அரசு சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்து விலகினால், அந்த அமைப்புக்கள் நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. சகல பாதிப்புக்களும் இலங்கைக்குத்தான்." - இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். படையினரைக் கெளரவிக்கும் போர் வெற்றி விழா ஜனாதிபதி ...

மேலும்..

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும்  நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன்! – கோட்டா திட்டவட்டம்

நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரத்தைத் தாம் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும், தேவைப்படின் அதனைப் பயன்படுத்தத் தயாராகவே இருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். "அரசமைப்பின்படியே நான் செயற்பட்டுள்ளேன். அரசியல் காரணங்களை வைத்து எனக்கு ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இறுதியாக தொற்றுக்குள்ளானவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர் என ...

மேலும்..

சுமந்திரனின் சர்ச்சைக்குரியதான பேட்டிக்கு நீதிபதியாகிய மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்! நாசூக்காகப் பதிலளிக்கிறார் சி.வி.கே.சிவஞானம்

கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சி. வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் என இராஐதந்திர வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது ...

மேலும்..

போர் வெற்றி விழா பொருத்தமற்றது! – மங்கள தெரிவிப்பு

"போரிலிருந்து  பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது" என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ...

மேலும்..

சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்க வேண்டாம் – நியாயத்தை விளக்குமாறு கோட்டாவிடம் சஜித் அணி வலியுறுத்து

"சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதென்பது நாட்டை பின்நோக்கியே அழைத்துச் செல்லும். அத்தகைய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தனது தரப்பு நியாயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இராணுவத்தையும், நாட்டையும் தொடர்ச்சியாக ...

மேலும்..