இலங்கை செய்திகள்

“வேண்டாம் சுமந்திரன்” கிளிநொச்சி வீதிகளில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

கிளிநொச்சி வீதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் ...

மேலும்..

அத்தனை பேரும் உத்தமர்தானா? -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

உலகம் கொரோனாவால் கொந்தளித்துக் கொண்டிருக்க, ஈழத்தமிழினத்தார் மத்தியில் விறுவிறுப்பாக வேறு கொந்தளிப்பு. கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் அவர்கள். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் வெளியிட்ட சில கருத்துக்களால், உணர்ச்சிமிக்க (?) ஈழத்தமிழினத்தார் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். அறிக்கைகள், பேட்டிகள் இணையப் பதிவுகள் என, வெளிவரும் ...

மேலும்..

முல்லைத்தீவிலிருந்து தேர்தல் ஆணையாளருக்கு அவசர கடிதம் – சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன்

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகந்தன் அவர்களை காரணம் இன்றி தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்வதை நிறுத்தகோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிட்டு அவசர கடிதம் ...

மேலும்..

கோட்டாபயவின் இனவாதப் பேச்சு நாட்டுக்கே பேராபத்தாக அமையும்! அரசை எச்சரிக்கிறார் சேனாதிராசா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த உரையால் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவோம்." என இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிக்காக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷிர்அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலை செப்டெம்பர் நடத்த முடிவு? தேசப்பிரிய தலைமையிலான ஆணைக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் தீர்மானம்

பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என அறியமுடிந்தது. மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் என ...

மேலும்..

இலங்கையில் கொரோனா: 584 பேர் குணமடைவு! 434 பேர் சிகிச்சையில்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569 இலிருந்து 584 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,027 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள ...

மேலும்..

கடற்படை சிப்பாய்களில் 585 பேருக்கு கொரோனா…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 585 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 221 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிகிச்சை ...

மேலும்..

வடிகான்களை சுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு மாகாணஆளுநர் இன்று மாநகர முதல்வருக்கு வழங்கினார்…

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற தூர்ந்து வடிகான்களைசுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு மாகாணஆளுநர் இன்று மாநகர முதல்வருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜாசரவணபவன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (20.05.2020) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலாகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பில் உள்ள வடிகான்கள் முகாமைத்துவம் பற்றி முதல்வர்அவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ள காலங்களில் மக்கள் எதிர்நோக்கும்அசௌகரியங்கள் பற்றியும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைப்பு முறை மற்றும் பராமரிப்புகுறித்தும் கலந்துரையாடப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடிகான்கள் நிரம்பி வழிந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு    உள்ளாகினர், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முன்னெடுப்புக்கள் முதல்வர் அவர்களால்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மட்டக்களப்பு மாநகர எல்லையில் முழுமைத்துவமானவடிகான்கள் அமைப்பு மற்றும் வடிகான்கள் பராமரிப்பு பற்றிய திட்டங்கள் அமைந்துள்ளன. ஆளுனருடனான கலந்துரையாடலில் வடிகான் விடயம் பற்றி பிரதான பேசு பொருளாக முதல்வர்அவர்களால் கருத்து பரிமாறப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தஆளுநரால் அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது. மேற்படிக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், ஆளுநரின் செயலாளர், திட்டமிடல் பணிபாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும்..

ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ள அழைப்பு

ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு ...

மேலும்..

ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை இழக்கும் ஆபத்து – சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ

ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நாடாளுன்றம் மீண்டும் செயற்படாவிட்டால் இலங்கை ஜனநாயக நாடு என அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதியை இழக்கலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜூன் 20 திகதி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு ...

மேலும்..

கடத்தல்கள் உண்மையாக நடக்கவில்லை என்பதைக் காட்ட ராஜிதவின் ஊடக சந்திப்பு உதவும் – ரஞ்சன்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளை வான் ஊடக சந்திப்பு, உண்மையான கடத்தல்கள் நடக்கவில்லை என்பதைக் காட்ட உதவும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

மீன்பிடித் துறைமுகங்களில் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு பணிப்புரை

இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – லங்கா IOC நிறுவன நிலையங்களை புறக்கணிக்க பொதுஜன பெரமுன கோரிக்கை

எரிபொருள் விலையை அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்த நிலையில் குறித்த நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா ...

மேலும்..

மத்தள, யாழ், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகள் – பிரசன்ன ரணதுங்க

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் ...

மேலும்..