October 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாண சபைகளின் தேவைகளை உணரத் தவறிய சக்திகள்..! -சுஐப் எம். காசிம்-

ராஜதந்திர நெருக்குவாரங்களின் எதிரொலிகள், நமது நாட்டு அரசியலில் இன்னும் நீங்கியதாக இல்லை. சீனாவின் தலையீடுகள் தலையெடுப்பதாக ஒரு சிலரும், இந்தியாவின் அழுத்தங்கள் அதிகரிப்பதாக இன்னும் சிலரும் பேசித்திரிவதும் இதற்காகத்தான். மேலைத்தேய நாடுகளின் பிடியிலிருந்து விலகுவத ற்காக வேறு ராஜதந்திரத்தைப் பாவிக்கப் புறப்பட்டதால் ...

மேலும்..

உரம் இன்றி உழவு இல்லை… விவசாயிகளின் கண்டனப் போராட்டம் மட்டக்களப்பில் வெல்லாவெளியில் ஆரம்பம்…

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பசளை விடயம் தொடர்பில் அவர்களின் தற்காலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி மேற்கொள்ளப்படும் கண்டனப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரண ஆதரவை வழங்கி வருகின்றது. அதனடிப்படையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ப்pரதேசங்களில் ...

மேலும்..

சாலை முகாமையாளரை மாற்றக் கோரி இ.போ.ச மட்டக்களப்பு சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையின் ஊழியர்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்;ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை போக்குவரத்து சபை மட்டக்கப்பு சாலையின் தற்காலிக முகாமையாளரின் செற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு அவரை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டிருந்தனர். மட்டக்களப்பு சாலையின் சுவர்களில் எதிர்ப்புப் பதாதைகள் தொங்கவிடப்பட்டு ஊழியர்கள் ...

மேலும்..

நிந்தவூர் அட்டப்பளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையில் விஜயதசமியை முனனிட்டு சரஸ்வதி தேவியின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை

சிவனருள் பவுட்டோசன் நீதியுதவியுடனும் நிந்தவூர் அட்டப்பளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலைக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நீதியுதவியுடனும் எள அமைக்கப்பட்டு வரும் அறநெறிப்பாடசாலைக்கட்டிடத்தின் முன்பாக அமைப்பதற்காக சமூகத்தொண்டர் தமிழரகன் சனா அவர்களிடம் மாவட்ட செயலக இந்துக்கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி கேட்டுக்கொண்டதற்கு அமைவாக ...

மேலும்..

மீலாது விழா வைகோ வாழ்த்து…

நாம் அனைவருமே சகோதரர்கள்; நம்மிடையே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என முழங்கி, மனித குல வாழ்க்கை சீர்படுவதற்காகவும், சகோதரத்துவத்தை நிலை நாட்டிடவும் எண்ணில் அடங்காத துன்பங்களைத் தாங்கிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ...

மேலும்..

இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளாகிய மிலாது நபி திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கை நெறியாகவே உருவாக்கிய நபிகள்,  அறப்போராளியாக, அரசியல்வாதியாக, சீர்த்திருத்தவாதியாக, பெண் விடுதலைக்குப் ...

மேலும்..

கோத்தாவின் கொள்கைப்பிரகடனம் மக்களுக்கு பொருத்தமானதாக இல்லை : மாற்று கொள்கையை அமுல்படுத்த முன்வரவேண்டும் – தவராசா கலையரசன் எம்.பி

அரசாங்கம் விவசாயிகளின் விருப்பு வெறுப்புக்களை ஓரம் தள்ளிவிட்டு இந்த துறையில் பாண்டித்தியம் பெற்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையெல்லாம் கவனத்தில் கொள்ளாது செயற்படுகிறது. இயற்கை பசளைகளை வழங்கி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று தனது கொள்கை பிரகடனத்தில்  ஜனாதிபதி உறுதி கொண்டுள்ளார். இந்த விடயமானது ...

மேலும்..

110 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது வீதிகள் அபிவிருத்தி : அபிவிருத்தி பணிகளை அதாஉல்லா எம்.பி ஆரம்பித்து வைத்தார்

கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தில் புனரமைப்பு செய்யப்படவுள்ள வீதிகளுக்கான உத்தியோகபூர்வ அங்குராப்பண வைபகம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இன்று மாலை தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் ஆரம்பித்து ...

மேலும்..

இனத்தின்விடுதலைக்காய் போராடிவர்கள் இன்று பசளைக்காக போராடுகின்றனர்- இரா.சாணக்கியன்!

இனத்தின் விடுதலைக்காய் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விவசாயிகளின் பிரச்சனைகளுக்கான தீர்வு கோரிய போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்றைய தினம் கடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று தரை வழிப் போராட்டமாக மாறியிருக்கின்றது. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனம் இன்று வாழ்வாதாரத்திற்காகப் போராடும் நிலைமைக்கு இந்த அரசு தள்ளிருக்கின்றது. நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளை அமைச்சரும், அரசாங்கமும் கவனத்தில் எடுக்காத காரணத்தினால் கடல்வழிப் போராட்டம் நடாத்தப்பட்டது. இன்று இரண்டாவது நாளாகத் தரைவழிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது வடக்கு கிழக்கிலே அதனது இடங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. போராட்டம் என்பது அறிந்து வருவது. அதற்கு எவரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை. இது மக்களுக்காக, விவசாயிகளுக்காகச் செய்யும் போராட்டம். ஆனாலும். நாங்கள் மண்வெட்டியை வைத்திருப்பது தான் விமர்சனப் பொருளாக இருக்கும். எம்மை விமர்சிப்பது பரவாயில்;லை. இவ்வாறாகவாவது எமது போராட்டம் இந்த அரசுக்குப் போய்ச் சேர வேண்டும். எங்களுடைய வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மீன்பிடியையும், விவசாயத்தையும் நம்பி வாழும் மக்களே அதிகம். அதிலும் இன்றைய தினம் நாங்கள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் வெல்லாவெளிப் பிரதேசம் தொன்னூறு வீதம் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள்தான். விவசாயிகளுக்கு இன்று உரம் இல்லாத நிலையில் இந்த மாவட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை எடுத்துக் கூறாமல் தங்களது வியாபார நலன்களை மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகவும் கவலையானதொரு விடயம். இயற்கைப் பசளையின் மூலம் விசாயம் செய்து எமது விளைச்சல்களை அதிகரிக்கலாம் என்று குழந்தைப் பிள்ளைத் தனமாகவும், குரங்குச் சேட்டையாகவும் கருத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கைப் பசளை பாவித்து விவசாயத்தில் அதிக விளைச்சல் பார்க்கலாம் என்று சொல்லுபவர்கள் உண்மையிலேயே விவசாயிகள் அல்ல. அவர்கள் வியாபாரிகள். நானும் உண்மையில் விவசாயி இல்லைதான் ஆனால் விவசாயிகள் படும் கஷ்டங்களைப் புரிந்து கொள்பவன் என்ற அடிப்படையில், மக்களோடு மக்களாக இருப்பவர்கள். தினமும் விவசாயிகள் அவர்களின் துயரங்களைச் சொல்லும் போது மக்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட யூரியா இன்று பத்தாயிரம் வரை அதிகரித்திருக்கின்றது. இவ்வாறு அதிகமான விலைக்குப் பசளை வாங்கும்போது நெல் விலை அதிகரிக்கும் அதன்மூலம் அரிசி விலை அதிகரிக்கும். எனவே இது வெறுமனே விவசாயிகளின் பிரச்சனை அல்ல. சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை. இது விவசாயிகளுக்கான போராட்டமே தவிர இதில் நாங்கள் அரசியல் இலாபம் தேடவில்லை. அரசோடு இருப்பவர்களுக்கும் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா அண்ணன் வெளிநாடு சென்றமையால் அவரால் வர முடியவில்லை. ஆனால் மற்றைய மூன்று  நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் வரவில்லை. ஏன்? விவசாய மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லையா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா? இது அரசியற் கட்சி சார்ந்த ஒரு போராட்டம் அல்ல. இது மக்களின் போராட்டம் அரசாங்கத்துடன் இருக்கின்றீர்கள் என்பதற்காக மக்களுக்காகப் போராடாமல் இருக்க முடியாது. கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று சொல்லுபவர்கள் உங்கள் மாவட்டத்தில் உங்களுக்கு வாக்களித்த மக்கள் உரமில்லாமல் கஸ்டப்படும் பொழுதும் கூட உங்கள் காரியாலங்களை மூடிக்கொண்டு குளிர் அறைகளில் இருந்து கொண்டிருப்பது மிகவும் கவலையான விடயம். இந்த வாரம் முழுவதும் போராட்ட வாரமாகவே இருக்கும். நேற்றைய தினம் எங்கள் மீனவர்களுக்காக, இன்றைய தினம் எங்கள் விவசாயிகளுக்காக, எதிர்வரும் நாட்களிலே காணி அபகரிப்பு, அண் அகழ்வு என்பவற்றுக்கெதிரன போராட்டங்கள் நடைபெறும். எனவே இனத்தின் விடுதலைக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள்” என தெரிவித்தார்.

மேலும்..

மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி.

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமிய பக்தர்களின் தீர்க்கதரிசியான முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினத்தை கொண்டாடும் அனைத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். மனிதநேயம் நிறைந்த கண்ணியமான மனித அன்பை கட்டியெழுப்புவதற்கு தனது தனிப்பட்ட ...

மேலும்..

உரப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி முள்ளியவளையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உரப்பிரச்சினைக்குத் தீர்வுகோரி முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் "உரமின்றி உழவு இல்லை, அரசே விவசாயத் துறையைக் காப்பாற்று, விவசாயம் எமது உயிர்மூச்சு, உரத்தினைத் தடைசெய்து எமது உழைப்பினை அழிக்காதே ...

மேலும்..

உரப் பிரச்சினைக்குத் தீர்வுகோரி கொக்குத்தொடுவாயில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உரப்பிரச்சினைக்குத் தீர்வுகோரி முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் "உரமின்றி உழவு இல்லை, அரசே விவசாயத் துறையைக் காப்பாற்று, விவசாயம் எமது உயிர்மூச்சு, உரத்தினைத் தடைசெய்து எமது உழைப்பினை அழிக்காதே ...

மேலும்..

போர்க்குற்றவாளியான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக ஒன்றிய அரசு அழைத்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

கடந்த 2009-ல், ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே சகோதர்களையும், சிங்கள ராணுவ தளபதிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் தோழமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. மேலும், சிங்கள பேரினவாத ...

மேலும்..

பயிர்ச்செய்கைகளுக்கான உரங்களை வழங்குவதுடன், அபகரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பயிர்நிலங்களையும் அரசு விடுவிக்க வேண்டும் – ரவிகரன்.

தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ...

மேலும்..

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் நிதிப்பங்களிப்பில் கல்முனை வைத்தியசாலைக்கு 14 லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் அன்பளிப்பு !

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சமூக நலத்திட்ட நிதிப்பங்களிப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை விடுதியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சுமார் 14 லட்சம் ரூபாய் பெறுமதியான High Flow Oxygen Ventilator இயந்திரம் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு ...

மேலும்..

நல்லாட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட I-Road Project அபிவிருத்திகளை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உரிமை கோர முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில் கடந்த நல்லாட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண சபையினால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி (I-Project) திட்டத்தினை தற்போதைய அரசாங்கத்தின் பிரதிநிதிகள்  உரிமை கோர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

கிழக்கில் 568 பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

கிழக்கு மாகாணத்தில் 568 பாடசாலைகள் மீண்டும் திறப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.பிள்ளைநாயகம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நடைமுறையிலுள்ள கொவிட் சூழ்நிலையில் ...

மேலும்..

இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரல்ல. சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை… (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்)

இனத்தின் விடுதலக்காகப் போராடிய இனத்தை இன்று பசளைக்காகவும் போராடும் நிலைக்கு இந்த அரசும் அரசுடன் இணைந்துள்ளவர்களும் சேர்ந்து தள்ளியுள்ளார்கள். இது விவசாயிகளின் பிரச்சனை மாத்திரமல்ல, சோறு சாப்பிடும் அனைவரினதும் பிரச்சனை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்;பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய ...

மேலும்..

களைகொள்ளிக்கு சிறுநீரையா பாவிப்பது..? (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – பா.அரியநேத்திரன்)

சேதனப் பசளை என்ற மாயை தற்போதைய அரசாங்கத்தினால் புகுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் களைகொள்ளிக்கு சிறுநீரையா பாவிப்பது? சேதனப் பசளை மூலம் விவசாயிகளுக்கு ஏற்படப் போகும் நஷ்டத்திற்கு நட்டஈடு வழங்கும் முன்மொழிவையும் எதிர்வரும் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் இணைத்துக் கொள்ளுங்கள் என தமிழ்த் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சேவையை பாராட்டி நிந்தவூரில் கௌரவிப்பு !

கொவிட் 19 கொரோணா தொற்று பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய  கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூரில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ...

மேலும்..

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை 30 ம் திகதி

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின் பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக, ...

மேலும்..

ஆர்மி தினத்தை முன்னிட்டு 241 வது படையணியினருக்கு அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால் கொரோனா கட்டுப்பாட்டு பொருட்கள் கையளிப்பு

மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

கிழக்கில் ஆசிரியர் போராட்டத்தை மழுங்கடிக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் முனைப்பு; -தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றச்சாட்டு

(அஸ்லம் எஸ்.மௌலானா) ஆசிரியர் சங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள முரண்பாட்டுப் போராட்டத்தை கிழக்கு மாகாணத்தில் மழுங்கடிப்பதற்கு சில அரசியல்வாதிகள் முனைப்புக் காட்டுவதாகவும் அதற்கு சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் துணை போகின்றனர் எனவும் தென்கிழக்கு கல்விப் பேரவை குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பேரவையின் தலைவர் ...

மேலும்..

மட்டக்களப்பின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் பணியினை ஆரம்பித்து வைத்த தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களின் ஊடாக பனை விதைகளை நடும் செயற்திட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் சமுக நலன் பிரிவு இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. அம்பாரை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் ...

மேலும்..

நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம் – மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியும் எரிப்பு

(க.கிஷாந்தன்) உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொடும்பாவியை எரித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று தமது போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில்  பெருந்திரளான விவசாயிகள் கலந்து ...

மேலும்..

அலுவலக நேரங்களில் நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

நெடுஞ்சாலைகளில் உள்ள நெரிசலைப் பார்க்க அமைச்சர் ஜோன்ஸ்டன் சென்றார். * அலுவலக நேரங்களில் நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களில்  ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக  புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். * நெடுஞ்சாலை பயனாளர்களுக்கு  முற்கொடுப்பனவு மின்னணு அட்டைகளை  ...

மேலும்..

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் பிரியாவிடை

கல்முனை பொலிஸ் மாவட்டத்துக்கான உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி பதுளை பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பி.எம்.ஜயரத்ன மற்றும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதம பொலிஸ் பரசோதகராக கடமையாற்றி வந்த நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று, மன்னார் பொலிஸ் ...

மேலும்..

கல்முனை விடயம் தொடர்பில் அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் மன்சூர் உளருகிறார் – ஐக்கிய காங்கிரஸ்.

க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ப‌து த‌மிழ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் உரிமை என முஸ்லிம் காங்கிர‌சின் முன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ச‌ம்மாந்துறையை சேர்ந்த எம்.ஐ.எம். ம‌ன்சூர் சொல்லியிருப்ப‌த‌ன் மூல‌ம் அவ‌ருக்கு க‌ல்முனை உப பிரதேச செய‌ல‌க‌ பிர‌ச்சினை ப‌ற்றி எந்த‌வித‌ அறிவும் இல்லை என்றே ...

மேலும்..

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார். இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஆர்வமுள்ள மாணவிகள் ...

மேலும்..

விடுதலையான ரிசாத் பதியுதீனினை வரவேற்று பௌத்த தேரர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் அணிதிரள்வு !

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சுமார் 174 நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் ...

மேலும்..

தேர்தலின் போது ஒரு பேச்சும் தேர்தலின் பின்னர் மற்றுமொரு பேச்சும் பேசுவது தமிழ் கூட்டமைப்பினருக்கு வழமையாகி விட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிங்களை  தனியான இனம் என  இன்னும்  ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லிங்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் ...

மேலும்..

சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாமையினால், வடக்கு-கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிப்பு?

இலங்கை அரசாங்கத்தின் மீன் பிடி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, இலங்கை சட்டத்திட்டங்களை முறையாக அமுல்படுத்தாத காரணத்தினால், வடக்கு- கிழக்கில் வாழும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்படி நடவடிக்கைகளை ...

மேலும்..

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு நடாத்தும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு !

"மாணவர் மகுடம்" வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய "சாதனையாளர் கௌரவிப்பு விழா"  சனிக்கிழமை பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ ...

மேலும்..