May 31, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை நிர்மாணத்துறையை வலுவூட்ட பயன்படுத்துக! அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கோரிக்கை

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருள்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடுகையில் விலை ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பும் உந்துசக்தியாக ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் அமைந்துள்ளது  பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிப்பு

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ...

மேலும்..

உத்தியோகபூர்வ இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்ட நீர்கொழும்பு பிரதேச செயலாளர்!

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார். அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) காலை அவசர தேவைக்காக  ஊழியர் ஒருவர், பிரதேச செயலரின் இல்லத்துக்குச் சென்றபோது அறையில் தூக்கில் ...

மேலும்..

மிதக்கும் சூரியசக்தி மின்னுற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்து!

இலங்கையில் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) கொரியா தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள மிதக்கும் சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புக்கான ...

மேலும்..

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின் பின்பே படுகொலையானார்! அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜ.நடேசன் 2021 ஆம் ஆண்டு அச்சுறுத்தப்பட்டார் என சர்வதேச ஊடக அமைப்பு ஒன்றில் முறைப்பாடு செய்யப்பட்டு சரியாக 3 வருடங்களின் பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..

யாழில் வார இறுதியில் ரோந்து நடவடிக்கை! பொலிஸார் அறிவிப்பு

யாழில் வார இறுதியில் தனியார் வகுப்புகள் இடம்பெறும் இடங்களுக்கு அண்மையில் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடைமுறையை தொடரவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதி ...

மேலும்..

ஊடங்களையோ மற்றும் சமூக ஊடகங்களையோ ஒளிபரப்பு அதிகாரசபைச் சட்டம் கட்டுப்படுத்தாது! நீதி அமைச்சர்  விஜயதாஸ தெரிவிப்பு

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் கொண்டுவருவதன் மூலம்  ஊடங்களையோ சமூக ஊடகங்களையோ அதன் மூலம் கட்டுப்படுத்த முடியாது. மாறாக, ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாகக் கொண்டுசெல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் ...

மேலும்..

ஆஸ்திரேலியா அரசின் ஆதரவை இலங்கை அரசு வரவேற்றுள்ளது! ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடலிலே அமைச்சர் ...

மேலும்..

நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வருவதில்லை! ஹரிணி அமரசூரிய வருத்தம்

மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பொருளாதார அசௌகரியத்தை வேறு விடயங்களால் தூண்டிவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச ...

மேலும்..

நாட்டில் நீதியை நிலைநிறுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்குக! சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜூலி சங் வலியுறுத்து

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்கு மிகவும் முக்கியம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ...

மேலும்..

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மாகாண, மாவட்ட ...

மேலும்..

ஷெகான் மற்றும் நந்தலாலை சந்தித்தார் கென்ஜி ஒகாமுரா!

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை நேற்று (புதன்கிழமை) சந்தித்தார்.

மேலும்..

மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கு ஏற்பாடுகள்!  சுகாதார அமைச்சர் கெஹலிய பணிப்புரை

டொலரின் பெறுமதி குறைவடைந்து வருகின்றமைக்கு சமாந்தரமாக மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாகக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மருந்துகளின் விலைகளைக் குறைந்த பட்சம் 15 சதவீதத்தால் குறைக்கப்பட ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 53 மில்லியன் டொலர்கள் வீதிகளைப் புனரமைக்கக் கடனுதவி! அமைச்சர் பந்துல தகவல்

இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்திகளைத் தற்காலிகமாக மீள ஆரம்பிப்பதற்காக 53 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கடன் மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படும் வரை முற்றாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் தற்காலிகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ...

மேலும்..

மஹிந்த – ரணில் இடையில் எவ்வித போட்டிகளுமில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித  போட்டியுமில்லை.  ஜனாதிபதி சிறப்பாக செயல்படுகிறார். நாட்டு மக்கள் மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது என்கிறார்கள். பெரும்பாண்மையான மொட்டுக்கட்சியினர் வாக்களித்தே அவரை நியமித்துள்ளோம். அவர் சரியாக வழிநடத்துகிறார் என முன்னாள் அமைச்சரும் ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியின் பிரதிதலைவர் லோரன்ஸ் மரணம்!

மலையக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் லோரன்ஸ் சுகவீனமடைந்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானார். சமகால மலையக அரசியல் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வறிஞருமான அ.லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அமரர் லோரன்ஸ் அவர்கள் தனது ஆரம்பகாலக் கல்வியைத் தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட ...

மேலும்..

ஜெரோம், நடாஷாவின் பின்புலத்தில் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளனவா? சந்தேகம் வெளியிடுகிறார் நளின் பண்டார

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷா ஆகியோரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பின்புலத்தில் அரசியல் நிகழச்சி நிரல் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் ...

மேலும்..

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும்? ஞானசார தேரரும் கேட்கிறார்

இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே ...

மேலும்..

வர்த்தக நிலையங்களை மூடி டெங்கு ஒழிப்பு  நடவடிக்கை!

கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கீழ் உள்ள விசுவமடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை  மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரையான காலப்பகுதியில் விசுவமடு வர்த்தக சங்கத்திற்கு  உட்பட்ட அனைத்து வர்த்தக  நிலையங்களையும் மூடி  டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தமது வரத்தகநிலையங்களின் ...

மேலும்..

05 மாணவர் கற்கை வள நிலையங்கள் அம்பாறை மாவட்டத்தில் திறந்துவைப்பு!

  அம்பாறை மாவட்டத்தில்  திருக்கோவில், சம்மாந்துறை, இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் உகன ஆகிய ஐந்து பிரதேசங்களில் தலா 5 பாடசாலைகளில் மாணவர் கற்கை வள நிலையங்கள்  திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. சோவ்ட் நிறுவனத்தால் ஜிசர்ட் மற்றும் கெல்விற்றாஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற ...

மேலும்..

திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம்!

எப்.முபாரக் திருகோணமலை ஹொறோவப்பொத்தானை பிரதான வீதியில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பிரதான வீதியின் இருமருங்கிலும் யானை வேலிகள் உள்ள போதிலும் அதனை உடைத்துக் கொண்டு வீதியில் வந்து நிற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. யானைக் கூட்டங்கள் பகல் வேளையிலே வீதியை நோக்கி படையெடுப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மாலைநேரங்களில் திருகோணமலை நகரிலிருந்து ...

மேலும்..

தோப்பூரில் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவக் கோரிக்கை! வங்கி தலைவருடன் எம்.எஸ்.தௌபீக் எம்.பி சந்திப்பு

தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ஏ.டி.எம். இயந்திரம் நிறுவுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் இலங்கை வங்கி தலைவர்  ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேராவிற்கும் இடையிலான சந்திப்பு இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர ...

மேலும்..

கல்முனையில் சுற்றாடல் வார வேலைத் திட்டங்கள் ஆரம்பம்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த மர நடுகை நிகழ்வு, செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபையின் பிரதான அலுவலக வளாகத்திலும் சிறுவர் பூங்காக்களிலும் மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ...

மேலும்..

கற்றல் உபகரணப் பொருள்கள் வளத்தாப்பிட்டியில் வழங்கல்!

சம்மாந்துறை வலயத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய புதிய வளத்தாப்பிட்டி நாவலர் வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அதிபர் கே கணேஷ் தலைமையில் நடைபெற்றது. சம்மாந்துறை நஜா பவுண்டேஷன் அமைப்பரால் வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு!

டெங்கு ஒழிப்பு சிரமதானம் காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. காரைதீவு முதலாம் ஆறாம் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் சேர்ந்து அப்பகுதி கிராம சபை உத்தியோகத்தர்களான செல்லத்துரை கஜேந்திரன் திருமதி சிறிகாந்தன் தலைமையில் சிரமதானத்தை மேற்கொண்டார்கள். காரைதீவு பொலிஸாரும் இணைந்து கொண்டனர். வருடாந்த திருக்குளிர்த்தி ...

மேலும்..

திருமலை அல்தாரீக் தேசிய பாடசாலையின்  55 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிக்கெட் சுற்றுப்போட்டி!

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வலயக்கல்வி அலுவலகத்துக்குட்பட்ட திஃஅல் தாரீக் தேசிய பாடசாலையின் 55 வருட நிறைவை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையிலான இரண்டாவது  மாபெரும் 'அல்தாரிக்கேயன்ஸ் மெகா ப்ளாஸ்ட் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்'அல் தாரிக் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் ஐ.எம்.தௌபீக் மற்றும் பழைய ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமான் மறைந்தாலும் காங்கிரஸ் இன்றும் பலமாகவேயுள்ளது! அதன் செயலாளர் ஜீவன் பெருமிதம்

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா ...

மேலும்..

ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த குளிர்ச்சிப் பெருவிழா!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு கடந்த திங்கட்கிழமை மாலை கடல் நீர் எடுத்து,  கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது. முன்னதாக ஆலயத்தில் தர்மகத்தாக்கள், கப்புகனார்கள் நிருவாகிகள் சேர்ந்து விசேட பூஜை வழிபாடு இடம்பெற்று, பாரம்பரிய ...

மேலும்..