தேர்தல் தினத்தன்று அவுஸ்திரேலியாவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட படகிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

தேர்தல் தினத்தன்று அவுஸ்திரேலியாவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட படகிலிருந்தவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்
அவுஸ்திரேலியாவின் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் இடைமறிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் படகை அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளது.
படகிலிருந்த ஒவ்வொருவரினதும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை திருப்பிஅனுப்பியதாக இறைமையுள்ள எல்லைகள் ஒப்பரேசனின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
பதில் பிரதமர் எனக்கு வழங்கிய அறிவுறுத்தல் தெளிவானது கடலில் உயிர்களை பாதுகாக்கும் இறைமையுள்ள எல்லை நடவடிக்கை குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதே அது என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று எல்லைகாவல் படையினர் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் படகை தடுத்து நிறுத்தியிருந்தனர்-லிபரல் கட்சி இறுதி நேரத்தில் வாக்காளர்களை கவருவதற்கு அதனை பயன்படுத்த முயன்றது.
நிச்சயமற்ற நிலையிலிருந்த வாக்காளர்களிற்கு குறுஞ்செய்தியை அனுப்பிய லிபரல் கட்சியினர் அவுஸ்திரேலிய எல்லைக்குள் நுழைய முயன்ற படகை இடைமறித்துள்ளோம், எங்களிற்கு வாக்களிப்பதன் மூலம் எல்லைகளைபாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
தொழில்கட்சி ஆட்சியை கைப்பற்றிய பின்னர் சட்டவிரோத படகுகள் குறித்த கொள்கை மாறவில்லை என இறைமையுள்ள எல்லைகள் ஒப்பரேசனின் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயலும் படகுகளை நாங்கள் இடைமறிப்போம் அதில் உள்ளவர்களை அவர்கள் புறப்பட்ட இடத்திற்கு அனுப்பிவைப்போம் அது பாதுகாப்பானது இல்லை என்றால் அவர்களது கோரிக்கைகளை ஆராயும் இடத்திற்கு அனுப்பிவைப்போம் என தெரிவித்துள்ளார்.
May be an image of ocean, nature and cloud

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்