பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை – ஆசிரியர் தொழிற்சங்கங்கள்

பரீட்சை கடமைகளுக்காக வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படும் நிதி இன்னும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என ஆசிரியர் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான பரீட்சை கடமை கொடுப்பனவை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளரான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் இவ்வாறான ஒதுக்கீடுகள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான கோரிக்கைகள் எழுத்து மூலமும் பலமுறை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2021 O /L பரீட்சை முடியும் வரை எரிபொருள் விலையை அதிகரிக்கும் முடிவை 10 நாட்களுக்கு ஒத்திவைக்க அரசாங்கத்தால் இயலாமை குறித்தும் வெளிப்படுத்தினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தேர்வுச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களின் வசதியை அரசாங்கம் புறக்கணிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.