எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்யவோ அல்லது கொள்வனவு செய்யவோ வேண்டாம்; லிட்ரோ

இன்று மற்றும் நாளைய தினங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்டுள்ள 2 எரிவாயு கப்பல்களை நாட்டை அண்மித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அதில் ஒரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதுடன், மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது.
குறித்த இரு கப்பல்களிலும் 7,500 மெட்ரிக் தொன் எரிவாயு காணப்படுகிறது. முதலாவது கப்பல் நாளை நாட்டை வந்தடைந்தவுடன், நாளை மறுதினம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்