“இணைய வழி குற்றங்களும் சிறுவர் பாதுகாப்பும்”  விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

நூருல் ஹுதா உமர்

இலங்கையில் இணைய வழி குற்றங்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த அதிகரிப்பானது சிறுவர்களின் அனைத்துவிதமான செயற்பாடுகளிலும்  பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இவற்றை மாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வூட்டுவதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக்கொள்ளும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி கருப்பொருளின் மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இஸ்லாமிக் ரிலீப் சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் இறக்காமம் மதீனா வித்தியாலத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரமத அதிதியாக கலந்து கொண்டதுடன்
கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ. ஜௌபர், இறக்காமம் அஷ்ரப் தேசிய பாடசாலை பிரதி அதிபர் இர்பானா வஹாப் ஆகியோர் விஷேட அதிதியாக கலந்து கொண்டதுடன் மேலும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறூல் ஹஸீனா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எஸ். றிஸ்மியா ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் உத்தியோகத்தர் கே. ஐஸ்வர்யா, நிகழ்ச்சி அதிகாரி எம்.எஸ். சுபுஹான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றதோடு,இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் உத்தியோகத்தர் கே. ஐஸ்வர்யாவினால் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் விழிப்புணர்வு அமர்வும் நடாத்தப்பட்டது. இணைய வழி குற்றங்களும் சிறுவர் பாதுகாப்பும் எனும் கருப்பொருளின் கீழ் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்