நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் ஏற்பாட்டிலும் தேசிய அணிக்கு தெரிவான கலையரசிக்கு நிதியுதவி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் கனடாவில் உள்ள உறவுக்கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் இலங்கை 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கலையரசிக்கு குறித்த அமைப்பினால் ஒரு தொகை நிதி வழங்கப்பட்டது

குறித்த அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரூடாகவே அந் நிதியுதவியை வழங்கியிருந்தார்கள்
நாடாளுமன்ற உறுப்பினருடன் முல்லைத்தீவு மாவட்ட துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் செல்வா மற்றும் கலையரசியின் பயிற்றுவிப்பாளர் தர்சன் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளுடன் சென்று வீராங்கனையின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்