சேலை இறுகி சிறுமி உயிரிழப்பு!

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் உள்ள தனிவீட்டு குடியிருப்பில் சிறுமியொருவர் சேலை பட்டி இறுகி உயிரிழந்துள்ளார்.
ஹைபொரஸ்ட், இலக்கம் ஒன்று தோட்ட பாடசாலையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் காவியா என்று அழைக்கப்படும் இராஜமாணிக்கம் விசாந்தினி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த சிறுமி தனது வீட்டுக்கு முன்பாக உள்ள முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாகவும் தாய் வெளியே வந்து பார்த்த போது, சிறுமியின் கழுத்து ஊஞ்சல் சேலையில் இறுகியிருந்துள்ளதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாய் கூச்சலிட்டதையடுத்து விரைந்துவந்த அயலர்வர்கள் சிறுமியின் கழுத்தில் இறுகியிறுந்த சேலை பட்டியை அப்புறுப்படுத்தி ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்