பிரதமர் ரணில் மீண்டும் இன்று பாராளுமன்றத்தில் விஷேட அறிவிப்பு…?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இது தொடர்பில் நாளை (இன்று) பாராளுமன்றத்தில் விஷேட அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதே நேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பல தடவை விஷேட அறிவிப்புக்கள், அறிக்கைகளை வெளியிட்டாலும், நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் நெருக்கடிக்குள் சென்று கொண்டிருப்பதும் குறிப்பிடதக்கது.

-காவியன்-

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்