நாடு திரும்பினார் கோட்டாபய! வெளியாகிய தகவல்

நாடு திரும்பியுள்ள கோட்டாபய

நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டம் காரணமாக அரச தலைவர் மாளிகையை விட்டு பாதுகாப்பாக வெளியேறியிருந்த கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூலை 9ம் திகதியன்று இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்காரர்கள் அரச தலைவர் மளிகை, அரச தலைவர் செயலகம் என்பனவற்றை முற்றுகையிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, கோட்டாபய அரச தலைவர் மாளிகையை விட்டு இரகசியமாக வெளியேறி குறிப்பிடப்பட முடியாத இடத்தில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிசொகுசு வாகனங்கள் செல்வதாக காணொளிகள் வெளியாகி இருந்தன, அதில் கோட்டாபய இருந்திருக்க கூடும் எனவும் அவர் நாட்டை விட்டு சென்றிருக்க முடியம் எனவும் தகவல் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சபாநாயகர் அறிவிப்பு

 

நாடு திரும்பினார் கோட்டாபய! வெளியாகிய தகவல் | Sri Lanka Political Crisis Gottabaya Escape

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று காலை அறிவித்திருந்தார்.

எனினும், சிறிது நேரத்தில் அவர் அந்த தகவலை மீளப் பெற்றிருந்தார்.

எவ்வாறாயினும், சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் போராட்டத்தை தொடர்ந்து கோட்டாபய பாதுகாப்பாக கப்பலில் ஏறியதாகவும் இன்று நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாகவும் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.