தேநீர் விலை குறையும்!.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர், மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் .
12.5 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது. அத்துடன் 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினாலும் 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்தமைக்கு நிகராக லாஃப் நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். லாஃப் நிறுவனம் விலைகுறைப்பிற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையாயின் லாஃப் நிறுவனத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை