பாராளுமன்றத்திலிருந்து களவு போகும் உணவுப்பொருட்கள்..
பத்தரமுல்ல பிரதேசத்தில் தலங்கம பொலிஸாரால் 100 கிராம் ஹெரோயினுடன் நேற்று (5) பாராளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஊழியர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இதேவேளை, ஐந்து லீற்றர் பால் கேன் உட்பட பல பொருட்களை பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு செல்ல முற்பட்டதாக கூறப்படும் ஊழியர் ஒருவரும் நேற்று (5) சிரேஷ்ட அதிகாரி ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள ஜெயந்திபுர பாதுகாப்பு நுழைவாயிலில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அறிவித்ததன் பிரகாரம் உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அவரை பிடித்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேயிலை உள்ளிட்ட சில உணவுப் பொருட்களும் வெளியேற்ற முயன்றதாகக் கூறப்படும் பொருட்களில் அடங்கும்.
இந்த சம்பவம் தொடர்பில் சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் நேற்று விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் பின்னர் சம்பவம் தொடர்பிலான விசேட அறிக்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் உள்ள பல கழிவறைகளில் வீசப்பட்டிருந்த சமைத்த கோழி இறைச்சியும் நேற்று (4) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் அதிகாரிகள் வந்துவிடுவார்கள் என்று பயந்து ஊழியர் அல்லது சிலர் இவற்றை இப்படி வீசியிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, பாராளுமன்ற ஊழியர்களின் உடமைகளை பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் போதும், வெளியேறும் போதும் சரிபார்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .
கருத்துக்களேதுமில்லை