தோற்கடிக்க முடியாத பிரேரணை – திக்திக் நிமிடங்களை நோக்கி நகரும் சிறிலங்கா!

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொடர்பான பொருத்தமான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா உள்ளிட்ட பல நாடுகளின் முன்முயற்சியில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதுடன், குறித்த பிரேரணை இதுவரை சுமார் 30 நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 51ஆவது மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று  நடைபெறவுள்ளது.

சிறிலங்கா தொடர்பான மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்தில், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விடயங்கள் மற்றும் பல சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவச் செல்வாக்கு அதிகரிப்பு, அரசாங்க நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை வழங்கப்படாமை போன்ற விடயங்கள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.