பெரும் சோகத்தை ஏற்படுத்திய 8 மாத குழந்தையின் உயிரிழப்பு
ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆண்குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
காய்ச்சலுடன் சளி
கடந்த ஏழுநாட்களாக குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(16) உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை