குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இழக்க நேரிடும்

குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் மூலம் 36 வயதுடைய பெண்ணொருவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுக்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யுமாறு நீர்கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று நீர்கொழும்பு நீதவான் சம்பிக ராஜபக்ஷ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சந்தேகநபருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் கணவர் ஆகியோருக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.